3 பகத்சிங்: காந்தி காப்பாற்ற மறுத்தது ஏன்?
பகத்சிங் உள்ளிட்டோர் மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு வேக, வேகமாக விசாரிக்கப்பட்டது.
ஜெயிலில் பகத்சிங் நிறைய புத்தகங்கள் படித்தார். இதை எடுத்துக்காட்டும் ஓவியம்
மறைக்கப்பட்ட வரலாற்றின் பக்கங்களைத் தூசு தட்டி தினத்தந்தி வாசகர்களுக்குத் தந்து வருகிறோம். அந்த வரிசையில் பகத்சிங்கின் வாழ்வில் புதைந்து கிடப்பவற்றை கடந்த இரு வாரங்களாக கண்டு வருகிறோம். சிறையில் அடைக்கப்பட்ட பகத்சிங் மீதான விசாரணையின் போது நடந்தவற்றைத் தொடர்ந்து, தீர்ப்பையும் அதன் விளைவுகளையும் இப்போது பார்க்கலாம். மகாத்மா காந்தி, பகத்சிங் உயிரைக் காப்பாற்ற மறுத்தது ஏன்? என்பதையும் காணலாம்.
1930 அக்டோபர் 7-ந் தேதி நீதிமன்றத்திற்குள்ளே தீர்ப்பு வழங்கப்பட்டது. நாடே பயந்ததைப் போல பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்கள் ஆயுள் தண்டனை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தண்டிக்கப்பட்டனர்.
பகத்சிங் உட்பட மூன்று பேருக்கு மரண தண்டனை என்ற செய்தி நாடெங்கிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கண்டன கூட்டங்கள் நடந்தன.
தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி 6 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி, இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் ஆட்சித்தலைவரான வைஸ்ராய் இர்வின் பிரபுக்கு அனுப்பினார்கள்.
மோதிலால் நேரு, மதன் மோகன் மாளவியா போன்ற தலைவர்கள் வைஸ்ராய்க்கு கடிதங்கள் எழுதினார்கள். 1931, பிப்ரவரி 17-ந் தேதியை தேசம் முழுக்க பகத்சிங் தினமாக அறிவித்து, தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தினார்கள். பகத்சிங்கின் பெற்றோர் செய்த மேல்முறையீட்டை அன்றைய இந்தியாவின் உச்சநீதிமன்றமாக லண்டனில் இருந்த பிரிவி கவுன்சில் ஒரே வாரத்தில் தள்ளுபடி செய்தது.
1931, மார்ச் 24-ந் தேதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இதைஅடுத்து பஞ்சாப் மாநில ஆளுனருக்கு பகத்சிங் ஒரு கடிதம் எழுதினார்.
1931 மார்ச் 3-ந் தேதியிட்ட அக்கடிதத்தில்... ‘ஆளுனர் அவர்களே, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நாங்கள் யுத்தம் தொடுத்தோம் என்று குற்றம்சாட்டி எங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. அதை நாங்கள் பெருமையோடு ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், யுத்தக் கைதிகளான எங்களை ராணுவ முறைப்படி போர் வீரர்களைக் கொண்டு சுட்டுக் கொல்வதுதானே நியாயம்? தூக்கிலிட்டுக் கொல்வது தேவையற்றது. ஆகவே, ராணுவ வீரர்களை அனுப்பி எங்களை சுட்டுக் கொல்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என்ற வாசகங்கள் படித்தவர்களை உலுக்கி போட்டன.
பகத்சிங் உள்ளிட்டோருக்கு தூக்குத்தண்டனையை ரத்து செய்தே தீர வேண்டும் என்ற கோரிக்கை நாடெங்கும் பெருங் குரலாக மாறிக்கொண்டிருந்த நேரத்தில் மகாத்மா காந்தி, ஆங்கிலேய அரசுடன் சமாதான பேச்சு நடத்திக் கொண்டிருந்தார். காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அதனால் காந்தி எப்படியாவது பகத்சிங்கை தூக்கிலிருந்து காப்பாற்றி விடுவார் என்று நம்பினார்கள்.
ஆனால் இயல்பிலேயே வன்முறை நடவடிக்கைகளை ஆதரிக்காத காந்தியடிகள் அதற்கான முயற்சி களை மேற்கொள்ளவில்லை. மார்ச் 25-ந் தேதி கராச்சியில் காங்கிரஸ் மாநாடு நடக்கவிருப்பதால் தண்டனை நிறைவேற்றத்தை ஒரு வாரம் ஒத்தி வைக்குமாறு வைஸ்ராய் இர்வினிடம் காந்தி கேட்டார். அதற்கு கூட அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
காந்தி ஒரு வார்த்தை அழுத்தமாக சொன்னால் தூக்கிலிடுவது நிறுத்தப்பட்டுவிடும் என்று கடைசி நேரம் வரையிலும் நேரு உள்ளிட்ட தலைவர்கள் நம்பினார்கள். அறிவித்ததற்கு ஒரு நாள் முன்பே பகத்சிங்கை தூக்கிலிடப்போகும் தகவல் அவர் களுக்குத் தெரிந்து விட்டது.
1931 மார்ச் 23 அன்று டெல்லியில் காந்தியடிகள் தங்கியிருந்த டாக்டர் எம்.ஏ.அன்சாரியின் வீட்டுக்கு நேருவும் மதன்மோகன் மாளவியாவும் போனார்கள்.
அன்று காந்தி மவுன விரதம். கைராட்டையில் நூல் நூற்றுக்கொண்டிருந்தார். நேருவுக்கு குளிர் ஜுரம். ஒரு சால்வையைப் போர்த்திக் கொண்டு நடுங்கிய படியே காந்தி முன்பு அமர்ந்தார்.
மாளவியா பதறியபடிகேட்டார், ‘பாபுஜி, இன்று மாலையில் பகத்சிங்கையும், அவரது தோழர்களையும் தூக்கிலிடப் போகிறார்களாம். இனியும் நாம் தாமதிப்பதற்கில்லை. நானும், நீங்களும், பட்டேலும், ஜவஹர்லாலும் சேர்ந்து இங்கிலாந்துக்கு தந்தி அனுப்பலாம். உடனே புறப்பட்டுச் சென்று கவர்னர் ஜெனரலைப் பார்த்து தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கும்படி கோரலாம். புறப்படுங்கள்’ என்றார்.
அதற்கு, ‘நான் செய்யக்கூடியதை எல்லாம் முன்பே செய்து விட்டேன். இனிமேல் ஒன்றுமில்லை. ஆண்டவன் விட்ட வழி’ என்று ஒரு தாளில் எழுதிய காந்தி அதை மாளவியாவிடம் நீட்டினார். மாளவியா ஒன்றும் பேசாமல் அந்தத் தாளை நேருவிடம் காட்டினார். அவரும் அதைப் படித்துவிட்டு காந்தியை உற்றுப் பார்த்தார். அவரோ எதுவுமே நடக்காதது போல மீண்டும் ராட்டையைச் சுழற்ற ஆரம்பித்துவிட்டார்.
அதைக் கண்ட நேரு கோபப்பட்டு பேசினார்.
‘ஆம்... இந்த நாட்டின் எண்ணற்ற இளம் மலர்கள் மண்ணில் உதிரட்டும். பகத்சிங்கு தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்படும் வேளையில் நீங்கள் முற்றும் துறந்த புத்தரைப்போல சம்மணம் போட்டு உட்கார்ந்து நூல் நூற்றுக்கொண்டே இருங்கள். போன வாரம் வைசிராய் இர்வின் பிரபுவோடு நீங்கள் கையெழுத்திட்ட சமரச ஒப்பந்தத்தை நாளை வரை தள்ளிப் போட்டிருந்தால், இன்று மாலையில் தூக்கிலிடப்படும் பகத்சிங் ரத்தத்தால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கலாமே பாபுஜி’ என்று ஆத்திரமும், கேலியும், வேதனையும் கலந்து குமுறினார் நேரு.
காந்தி அதற்கு எந்தப் பதிலையும் கூறவில்லை. அவரை மீறி எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் மதன் மோகன் மாளவியாவும் ஜவஹர்லால் நேருவும் கோபத்தோடு வெளியேறினர்.
1. லாகூர் சதிவழக்கில் பகத்சிங் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரங்கள் அன்றைய தினசரியில் படத்துடன் வெளியிடப்பட்டது
2. பகத்சிங்கிற்கு தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகல்.
உயர்மட்டத்தில் நடந்த இந்த கடைசி கட்ட நகர்வு கள் வெளியில் தெரியவில்லை. அதே நாளில் தன் மகனை பார்ப்பதற்காக லாகூர் சிறைக்கு காலையிலேயே வந்துவிட்டார் பகத்சிங்கின் தந்தை. அவரை உள்ளே அனுமதிக்காமல், சாக்கு போக்குகளைச் சொல்லி நேரத்தைக் கடத்தி வந்தார்கள்.
மார்ச் 24-ந் தேதி ஆயிரக்கணக்கானோர் லாகூர் சிறையை முற்றுகையிட்டு தண்டனையை நிறைவேற்ற விடாமல் செய்து விடுவார்கள் என்று பயந்த ஆங்கிலேய அரசு 23-ந் தேதி மாலையே வெளியில் சொல்லாமல் மூவரையும் தூக்கிலிட முடிவெடுத்தது. இதற்காக மதியம் 2 மணியிலிருந்தே வேலைகள் ஆரம்பமாயின. சிறைச்சாலையே பரபரப்பானது. 4 மணிக்கே கைதிகள் அவரவர் அறைக்குள் அனுப்பப்பட்டனர். வெளியில் இருந்து யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
பகத்சிங்கிடம் தகவலைத் தெரிவித்த போது, ‘அடிமை தேசத்தில் இன்னொரு நாள் வாழ்வதற்கான வாய்ப்பைக் குறைத்த அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்’ என்று மெலிதாக புன்னகைத்தார்.
இரண்டாண்டு கால சிறைவாசம் பகத்சிங் எனும் புரட்சியாளனை அந்தளவுக்கு மெருகேற்றி இருந்தது. சிறைக்குள் செல்லும் போது அவருக்கு வயது 21. நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வைக்காமல் தாமே வாதாடியதோடு, மக்கள் எழுச்சி பெறுவதற்கான அறைகூவல்களையும் விசாரணைகளின் போது, பகத்சிங் முன் வைத்தார்.
சிறைக்குள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சக போராளிகளோடு சேர்ந்து மாதக்கணக்கில் உண்ணாவிரதம் இருந்தார். அதில் தன் உயிர்த்தோழர்களான ஜதீன் தாஸ், மஹாவீர் சிங் ஆகியோரைப் பறிகொடுத்தார். இத்தகைய நெருக்கடியான நிலையிலும் சிறைக்குள்ளேயே சுமார் 151 புத்தகங்களைப் படித்து 404 பக்கங் களுக்கு குறிப்பு எடுத்து வைத்திருந்தார். 6 சிறு நூல்களை எழுதினார்.
‘ஆயுதம் தாங்கிய அழித்தொழிப்பு முறை சரியான போராட்ட முறையல்ல’ என்பதையும் ஒரு கட்டத்தில் அவர் உணர்ந்து கொண்டார். பஞ்சாப்பில் தொடங்கப்பட்ட மாணவர் அமைப்பு ஒன்றுக்கு அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ‘தோழர்களே, இன்று துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் கையில் எடுக்குமாறு இளைஞர்களாகிய உங்களை நாங்கள் கோரப் போவதில்லை. இளைஞர்கள், தொழில்மயமான பகுதிகளின் சேரிகளிலும், கிராமப் புறங்களின் ஓட்டைக் குடிசைகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக் கணக்கானவர்களை விழிப்படைய செய்ய வேண்டும்’ என புரட்சிக்கான உண்மையான வரையறையை கொடுத்திருந்தார்.
‘தான் யார்?’ என்பதையும், அரசியலுக்கு வரும் இளைஞர்கள் தன்னை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் பகத்சிங் தெளிவான வார்த்தைகளில் பதிந்து வைத்தார்.
தண்டனை நிறைவேற்றத்திற்கு 45 நாட்களுக்கு முன் அவர் எழுதிய குறிப்பில், ‘நான் ஒரு பயங்கரவாதியல்ல. நான் ஒரு புரட்சியாளன். நீண்ட திட்டத்தை, தீர்மானகரமான சிந்தனைகளைப் பெற்றிருக்கும் ஒரு புரட்சியாளன். எனது புரட்சிகர வாழ்க்கையின் ஆரம்ப நாட்களைத் தவிர நான் ஒருபோதும் பயங்கரவாதியாக இருந்ததில்லை’ என்று பிரகடனம் செய்தார்.
தவறுகளைச் சரி செய்து கொள்ளும் இத்தகைய அரிதான தெளிவும், இளைஞர்கள் தம்மைத் தவறாக புரிந்துகொண்டு வன்முறையில் இறங்கிவிடக் கூடாது என்று எதிர்காலத்திற்கான செய்தியைச் சொல்லும் தீர்க்கதரிசனமும் பகத்சிங்கிற்கு 20 வயதுகளிலேயே இருந்தது. இதுவே மற்ற புரட்சியாளர்களிடம் இருந்து அவரை உயர்த்திக் காட்டியது.
அவரது மன வலிமை, ஆழமான தேசப்பற்று, தனி மனித ஒழுக்கங்களுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம், அறிவாற்றல், தொடர்ச்சியான புத்தக வாசிப்பு எல்லாம் அவரது புகழுக்கு காரணமாயின. பகத்சிங்கின் கடைசி நாளில் என்ன நடந்தது? பகத்சிங் தூக்கில் போடப்பட்டதாக வரலாறு இதுவரை நமக்குச் சொல்லித்தந்திருப்பது உண்மையா? என்பது போன்ற தகவல்களுடன் அடுத்த வாரம் ரகசியங்கள் தொடரும்.
அம்மாவின் வார்த்தைகள்!
தூக்குத்தண்டனை அறிவிக்கப்பட்டவுடன் பகத்சிங்கின் தந்தை கலங்கினாலும் அவரது தாய் வித்யாவதி 1931, மார்ச் 3-ந் தேதி மகனை சிறையில் சந்தித்து சொன்ன வார்த்தைகள் மனவலிமை நிறைந்தவை. ‘மகனே! பிறந்தவர்கள் இறப்பது உறுதி. ஆனால் இறந்த பின்னும் வெகுசிலரையே உலகம் நினைவில் கொள்ளும். அத்தகைய பெருமை பெற்றவர்களுள் நீயும் ஒருவன். அதனால் தூக்கு மேடைக்குச் செல்லும் போது நீ ஆனந்தமாக செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்’.
இந்த வார்த்தைகள், ‘தாய் கலங்குவாரோ’ என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்த பகத்சிங்கிற்கு பெரும் ஆறுதலை அளித்தன.
காணாமல் போன நூல்கள்
சிறையிலிருக்கும் போது பகத்சிங் எழுதிய படைப்புகளில் முக்கியமானவை: ‘கனவுலகத்திற்கு அறிமுகம்’, ‘நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன்?’, ‘சோஷலிசத்தின் கோட்பாடுகள்’, ‘சுயசரிதை’, ‘இந்தியாவில் புரட்சி இயக்கத்தின் வரலாறு’, ‘மரணத்தின் வாசலில்’. இவற்றில் முதல் இரண்டு படைப்புகள் மட்டுமே இப்போது இருக்கின்றன. மற்ற நான்கும் சிறையில் இருந்து ரகசியமாக வெளியே கொண்டு வரப்பட்டாலும் பின்னாளில் காணாமல் போய்விட்டன.

Related Tags :
Next Story