வானில் ‘வரையும்’ வித்தியாச ஓவியர்!
பலவித பொருட்கள், வண்ணங்களைக் கொண்டு வரையும் ஓவியர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் பிரேசில் நாட்டைச் சேர்ந்த விக் முனிஸ் போல எந்த ஓவியரும் இருக்கமுடியாது.
ஆம், இவருக்கு வானமே திரை. விமானமே தூரிகை. விமானத்தில் இருந்து வெளிப்படும் புகை போன்றவைதான் வண்ணங்கள்.
“ஓவியம் எப்படி உருவாகிறது என்பதை பார்க்க மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். எனவே அதை நேரடியாக ஒளிபரப்பும் விதத்தில் செய்துகாட்ட விரும்பினேன்” என்று தனது ‘வானளாவிய’ முயற்சி பற்றிக் கூறுகிறார், முனிஸ்.
பார்ப்பவர்களால் என்ன ஓவியம் உருவாகப் போகிறது என்று ஊகிக்க முடியாத வகையில் வானத்தில் அவர் வரைவார்.
சின்னஞ்சிறு விமானம் வானில் மெல்லப் பறந்தபடி வரைந்து செல்லும். பார்வையாளர்கள் அது போட்டுச்செல்லும் கோட்டைத் தொடர்வார்கள்.
அது என்ன ஓவியமாக உருவாகும் என்று ஆர்வம்பொங்க அவர்கள் பார்க்கும்போதே கோடுகள் இணைந்து ஓவியம் உயிர் பெறும்.
அது பலவகையான மேகங்களைக்கொண்ட ஓவியமாகத் தோன்றும். பார்வையாளர்களின் கண்முன்பே காற்று அதை லேசாக அசைத்து இழுத்துச் செல்லும்.
வானில் ஓவியம் ஒன்று மிதந்து செல்லும் அதிசயக் காட்சியை நீங்கள் பார்ப்பீர்கள்.
“உண்மையில் இது மிக மிக எளிமையானதுதான். ஆனால் புதுமையான காட்சி அனுபவத்தை தரக்கூடியது” என்கிறார், முனிஸ்.
நிறையப் பேர் தன்னை தொலைபேசியில் அழைத்து, ‘உங்கள் மேக ஓவியத்தைப் பார்த்தேன்’ என்று பாராட்டுவதாகச் சொல்கிறார் இவர்.
கண்ணாடிக் கட்டிடத்தில் அவரது மேக ஓவியம் பிரதிபலிப்பதைப் பார்த்தேன் என்று சிலர் பாராட்டுகிறார்கள்.
இந்தப் புதிய ஓவியமுறையை உருவாக்கியபோது, கலை பொதுவானது, பொதுமக்களுக்கானது, பொதுச்சொத்து என்கிற புரிதலுடனே செய்ததாக முனிஸ் கூறுகிறார்.
பார்வையாளர்கள் கண்முன்னே உருவாகி அதேவேகத்தில் காணாமல் போகும் இது, மிகவும் வித்தியாசமான ஓவியம்தான்!
கைதிகள் இல்லை... மூடப்படும் சிறைகள்!
சிறைச்சாலைகள் நிரம்பி வழியும் நாடுகளுக்கு நடுவில், போதிய கைதிகள் இல்லாததால் நெதர்லாந்து நாட்டில் ஒவ்வொரு சிறையாக மூடப்பட்டு வருகின்றன.
நெதர்லாந்தில் குற்றச்சம்பவங்களும், குற்றவாளிகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துவருகின்றனவாம்.
இதன் காரணமாக அந்நாட்டில் பல சிறைகள் மூடுவிழா கண்டிருக்கின்றன.
கடந்த ஆண்டு மட்டும் அங்கு 19 சிறைச்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு செயல்படும் சிறைகளிலும் மிகச்சிறு எண்ணிக்கையில்தான் கைதிகள் உள்ளனர்.
கடந்த 2005-ம் ஆண்டு கணக்கின்படி, 14 ஆயிரத்து 468 பேர் சிறையில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு கணக்குப்படி, 8,245 பேர்தான் அந்நாட்டுச் சிறைகளில் இருந்தனராம்.
தற்போது அந்த எண்ணிக்கை இரட்டை இலக்கமாக குறைந்துவிட்டதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
சிறைக் கைதிகள் வெளியுலக வாழ்வுக்குத் திரும்பும் மறுவாழ்வுப் பணிகளில் நெதர்லாந்து அரசு தீவிரம் காட்டுகிறது.
இதுபோன்ற காரணங்களாலும் கைதிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
இந்த விஷயத்தில், லட்சியவாதிகள் கனவு காணும் தேசமாக நெதர்லாந்து உருவாகி வருகிறது என்றால் மிகையில்லை.
மலைப்பூட்டும் ரெயில்... திகைப்பூட்டும் கட்டணம்!
ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சொகுசு ரெயில், உள்ளே நுழைந்து பார்த்தால் மலைப்பூட்டுகிறது. இதன் கட்டணங்களோ திகைப்பூட்டுகின்றன.
இந்த ரெயிலில் குறைந்தபட்சக் கட்டணமே, ரூ. 1.84 லட்சம் ஆகும். அதிகபட்சக் கட்டணம், சுமார் ரூ. ஆறரை லட்சம்.
கிழக்கு ஜப்பான் ரெயில்வே நிறுவனம் இந்த ஆடம்பர சொகுசு ரெயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. சொகுசு இருக்கைகள், வானத்தைப் பார்த்தவாறு பயணிப்பதற்கு ஏற்ற வடிவமைப்பு, இருவர் மட்டும் தனியாகத் தங்குவதற்கான அறை, கட்டில்கள், சமையலறை, குளியலறை, பியானோ வாசிப்பதற்கான அறை என்று இந்த நடமாடும் சொர்க்கத்தில் இல்லாத வசதிகளே இல்லை எனலாம். ஒவ்வொன்றும் பிரம்மாண்டமான முறையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
‘ஷிகிஷிமா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சொகுசு ரெயில், டோக்கியோ- ஹொக்கைடோ இடையே இயக்கப்படுகிறது.
இந்த ரெயிலில் உயர் வகுப்பில் 4 நாட்கள் பயணிப்பதற்கு 10 ஆயிரம் டாலர் (ரூ. 6.43 லட்சம்) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலில் பயணிப்பதற்கான மிகக் குறைந்த கட்டணம் 2,860 டாலர்கள் (ரூ. 1.84 லட்சம்).
இந்தக் கட்டணத்தில், சாதாரண வகுப்பில் 2 நாட்களுக்குப் பயணிக்கலாம் என்று குறிப்பிட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இப்படி அதிக கட்டணத்தை ரெயில்வே நிர்வாகம் நிர்ணயித்துள்ளபோதிலும், இதில் பயணிப்பதற்கு மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த ரெயிலில் பயணிப்பதற்கான இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.
இந்த ரெயிலில் செல்லும் முதல் 33 பயணிகளுக்கு சலுகைகளை அறிவித்துள்ள ரெயில்வே நிர்வாகம், அவர்களுக்கு மட்டும், ரெயில் பாதையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ரெயில் நின்று செல்லும் என்று அறிவித்துள்ளது.
மனம் இருந்தால் நிறையப் பணம் கொடுத்து இந்த ரெயிலில் பயணிக்கலாம்!

Related Tags :
Next Story