ஆஸ்திரேலிய வீடுகளில் அதிகரிக்கும் சூரிய மின்னுற்பத்தி
நம் நாடு மட்டுமல்ல, வளர்ந்த நாடுகள் பலவும்கூட மின்சாரப் பற்றாக்குறைக்கு முழுமையாகத் தீர்வு கண்டுவிடவில்லை.
அந்த வரிசையில், ஆஸ்திரேலியாவிலும் கோடைகாலத்தை ஒட்டி மின் தட்டுப்பாடு அதிகரித்துவருகிறது.
ஆனால் அதிலிருந்து தப்பிக்க விரும்பும் வீட்டு உரிமையாளர்கள், சூரியஒளி மின்சாரத்தைச் சேமிக்கும் பேட்டரிகளை நிறுவ ஆரம்பித்துள்ளனர்.
மின் தட்டுப்பாட்டில் இருந்து தப்ப வேண்டும் என்பதே பலரின் முதன்மையான நோக்கம். அதேசமயம் இதற்கு ஆகும் கூடுதல் செலவு பலரை யோசிக்க வைக்கிறது.
தொடர்ந்து அதிகரிக்கும் மின் கட்டணத்தைக் கட்டுவதா அல்லது அதிக பணத்தை ஒரேயடியாக செலவு செய்து சூரியஒளி மின்சாரத்தைச் சேமிக்கும் கட்டமைப்பை நிறுவி மின்கட்டணத்திலிருந்து மொத்தமாகத் தப்புவதா என்று சிலர் கணக்குப் போடுகிறார்கள்.
வேறு சிலரோ, சுற்றுச்சூழலை கெடுக்காத, புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்திக்கு தம்மாலான பங்காக இதை நிறுவுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.
அதேசமயம் இதனால் இன்னொரு பக்கவிளைவும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
அதிகமான ஆஸ்திரேலிய மக்கள் இப்படி புதுப்பிக்கத்தக்க மின்சக்திக்கு மாற மாற, அதைச் செய்ய முடியாமல் அரசின் பொது மின் விநியோகக் கட்டமைப்பை மட்டுமே நம்பியிருப்பவர்கள், அதைப் பராமரிக்க ஆகும் கூடுதல் கட்டணத்தையும் சேர்த்துச் சுமக்க வேண்டி வரும் என்று கூறப்படு கிறது.
எது எப்படியிருந்தாலும், எல்லோரும் ஒருகட்டத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக் குத்தான் மாறியாகணும்!

Related Tags :
Next Story