சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைக்கிறார்
சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது.
சேந்தமங்கலம்,
சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள காந்திபுரம் நைனாமலை செல்லும் சாலையில் மாப்பிளையான் தோட்டம் உள்ளது. இங்கு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படுகிறது.
இதற்காக மாடுகளை பாதுகாப்பாக கொண்டு வருவதற்கும், மாடுபிடி வீரர்கள் களமும் அங்கு தயார் செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தங்கள் காளைகளை அதன் உரிமையாளர்கள் 150–க்கும் மேற்பட்டோர் அழைத்து வர விழாக்குழுவினரிடம் டோக்கன் பெற்றுள்ளனர்.
கலெக்டர் தொடங்கி வைக்கிறார்இன்று காலை 8 மணிக்கு, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்கிறார். நாமக்கல் மாவட்ட போலிஸ் சுப்பிரண்டு அருளரசு, சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன், எஸ்ஆர்.எம். குழும துணை தலைவர் ஜெயசீலன், தமிழ்நாடு வீர விளையாட்டு கூட்டமைப்பின் மாநில தலைவர் ஒண்டிராஜி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு குழுவினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.