போடி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து ஆய்வு


போடி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து ஆய்வு
x
தினத்தந்தி 14 May 2017 4:00 AM IST (Updated: 14 May 2017 12:49 AM IST)
t-max-icont-min-icon

போடி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு

போடி,

போடி தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்–அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களாக நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக நேற்று போடி நகராட்சியில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

 அப்போது அவர், பாதாள சாக்கடை திட்ட பணிகள் எந்த அளவில் முடிந்துள்ளன? என்பது குறித்து பொறியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும் போடி மயானம் செல்லும் சாலையில் பழைய நகராட்சி குப்பை கிடங்கில் அமைக்கப்பட்டு வரும் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர், பணிகளை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆய்வின்போது, தேனி எம்.பி. ஆர்.பார்த்திபன், முன்னாள் எம்.பி. சையதுகான், நகர்மன்ற முன்னாள் தலைவர்கள் போடி பழனிராஜ், கம்பம் சிவக்குமார், குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் சுல்தான், பாதாள சாக்கடை திட்ட உதவி பொறியாளர்கள் பார்த்திபன், நாகேந்திரமணி, போடி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சரவணக்குமார், உதவி பொறியாளர் குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story