பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த அமைச்சரவை கூட்டம் நாராயணசாமி தலைமையில் நடந்தது
புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த அமைச்சரவை கூட்டம் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது.
புதுச்சேரி,
புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 16–ந்தேதி கூடுகிறது. இதையொட்டி சட்டசபை வளாகத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கவர்னர் உரை தயாரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, கமலக்கண்ணன், தலைமை செயலர் மனோஜ் பரிதா, கவர்னரின் செயலர் தேவநீதிதாஸ், அரசு செயலர்கள் நரேந்திரகுமார், கந்தவேலு, சுந்தரவடிவேலு, அருண்தேசாய், செந்தில்குமார், ஜவகர், மணிகண்டன், கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத், போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்அதைத்தொடர்ந்து அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சட்டசபை வளாகத்தில் நாராயணசாமி தலைமையில் நடந்தது.
இதில் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி, எம்.என்.ஆர்.பாலன், விஜயவேணி, சிவா, கீதா ஆனந்தன், அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.