திருவள்ளூர் மாவட்டத்தில் தகுதி சான்று பெறாத பள்ளி வாகனங்கள் 1–ந் தேதிக்கு பின்னர் இயக்க அனுமதி இல்லை
திருவள்ளூர் மாவட்டத்தில் தகுதி சான்று பெறாத பள்ளி வாகனங்கள் 1–ந் தேதிக்கு பின்னர் இயக்க அனுமதி இல்லை கலெக்டர் எச்சரிக்கை
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் தகுதி சான்று பெறாத பள்ளி வாகனங்கள் 1–ந் தேதிக்கு பின்னர் இயக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று கலெக்டர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தகுதி சான்று பெற வேண்டும்திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
பள்ளி விடுமுறையான மே மாதத்தில் அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தங்களிடம் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களை தங்களின் பள்ளி எல்லைக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஆய்வுக்கு உட்படுத்தி தகுதி சான்றுகள் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (பள்ளி வாகனங்களை ஒழுங்கு மற்றும் கட்டுப்படுத்துதல்) சிறப்பு விதிகள் 2012–ன் படியும், சென்னை போக்குவரத்து ஆணையர் ஆணையின் படியும், திருவள்ளூர் வருவாய் ஆர்.டி.ஓ. தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திருவள்ளூர் செங்குன்றம், பூந்தமல்லி, அம்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டு, முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கைமேற்படி குழு அலுவலர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தங்கள் பள்ளி வாகனங்களை தயார்படுத்தி அறிவிக்கப்படும் பொது இடங்களில் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்களால் அறிவிக்கப்படும் நாட்களில் தங்களது பள்ளி வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அதற்கான சான்றை கண்டிப்பாக பெற வேண்டும்.
அவ்வாறு தகுதி சான்று பெறாத பள்ளி வாகனங்கள் வருகிற 1–ந் தேதிக்கு பின்னர் இயக்க அனுமதிக்கபட மாட்டாது. ஆய்வு சான்று பெறாமல் வாகனங்கள் இயக்கப்பட்டால் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு அதன் அனுமதி சீட்டு ரத்து போன்ற ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.