உஸ்மனாபாத் மாவட்டத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு
உஸ்மனாபாத் மாவட்டத்தில் தண்ணீர் சேமிப்பு திட்டம் உள்பட ஒட்டுமொத்த வளர்ச்சி பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாக முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
உஸ்மனாபாத்,
உஸ்மனாபாத் மாவட்டத்தில் தண்ணீர் சேமிப்பு திட்டம் உள்பட ஒட்டுமொத்த வளர்ச்சி பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாக முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
தேவேந்திர பட்னாவிஸ் ஆய்வுமரத்வாடா மண்டலம் உஸ்மனாபாத் மற்றும் ஜல்னா மாவட்டங்களில் முதல்–மந்தி தேவேந்திர பட்னாவிஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று 2016–17–ம் ஆண்டில் குடிநீர் சேமிப்பு திட்டம், பண்ணை குளம் அமைத்தல், வேளாண் பம்ப் செட்டுகளுக்கு மின்சாரம் வினியோகம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டு திட்டம், அனைவருக்கும் வீடு மற்றும் பயிர்க்கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.
அத்துடன் உஸ்மனாபாத் மாவட்டம் பூம் தாலுகா ஹிவ்ரா கிராமத்தில் தண்ணீர் சேமிப்பு திட்டத்துக்கான இடங்களை ஆய்வு செய்தார். மேலும், அந்த கிராமத்தில் உணவு தானிய வினியோக திட்டத்தை தொடங்கி வைத்த அவர், பள்ளிக்கூட மாணவர்களுடன் கலந்துரையாடினார். இது மட்டுமின்றி, பிரதமரின் அனைவரும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், அந்த கிராமத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டார்.
அதிகாரிகளுக்கு உத்தரவுஇதையடுத்து, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘உஸ்மனாபாத் மாவட்டத்தில் அனைத்து தாலுகாக்களிலும் ஒரு சில இடங்களை தவிர பிற பகுதிகளில் வளர்ச்சி பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்து விட்டன. முடியும் தருவாயில் இருக்கும் பகுதிகளில், வளர்ச்சி பணிகளை குறித்த காலவரையறைக்குள் அதிகாரிகள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மந்திரிகள் ஷாம்பாஜி நிலங்கேகர், மகாதேவ் ஜன்கர், சுபாஷ் தேஷ்முக், பாரதீய ஜனதா செயலாளர் சுர்ஜித்சிங் தாக்குர், ரவி கெய்க்வாட் எம்.பி., மாவட்ட கலெக்டர் ராமகிருஷ்ண காம்பே மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.