‘நீட்’ தேர்வில் கெடுபிடி: கேரளா போல் தமிழகத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்


‘நீட்’ தேர்வில் கெடுபிடி: கேரளா போல் தமிழகத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 14 May 2017 4:45 AM IST (Updated: 14 May 2017 4:37 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வில் கெடுபிடி: கேரளா போல் தமிழகத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் திருநாவுக்கரசர் பேட்டி

ஆலந்தூர்,

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

‘நீட்’ தேர்வுக்கு காங்கிரஸ் தான் காரணம் என தம்பிதுரை சொல்வது சரியல்ல. இந்தாண்டு தான் அந்த தேர்வு நடைமுறை செய்யப்பட்டது. ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோது அந்த தேர்வை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயன்றபோது தடுத்தார். இப்போது சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியும் கண்டுகொள்ளவில்லை.

‘நீட்’ தேர்வின் போது கெடுபிடியால் மாணவர்கள் சிரமப்பட்டனர். இதற்கு காரணமானவர்கள் மீது கேரளாவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுபோல தமிழகத்திலும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சில மாநிலங்களில் எளிமையாகவும், சில மாநிலங்களில் கஷ்டமாகவும் தேர்வு இருந்ததாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது எங்கு பார்த்தாலும் போராட்டம் நடக்கிறது. உட்கட்சி பிரச்சினை, அமைச்சர்கள் இடைய உள்ள கோஷ்டி சண்டையால் மத்திய பா.ஜனதா அரசு தமிழக அரசை முடக்கி வருகிறது. மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு உள்ளது.

பிளஸ்–2 தேர்வில் ரேங்க் மாற்றம் என்ன காரணத்துக்காக செய்யப்பட்டது. மாணவர்களுக்கு அசவுகரியமான வேலைகளை ஏன் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story