மழையால் விபத்து சாலையில் லாரி கவிழ்ந்து 2 கிளினர்கள் சாவு
மழை காரணமாக சாலையில் லாரி கவிழ்ந்து 2 கிளினர்கள் பலியானார்கள்.
மும்பை,
மழை காரணமாக சாலையில் லாரி கவிழ்ந்து 2 கிளினர்கள் பலியானார்கள்.
லாரி கவிழ்ந்தது
மும்பையில் நேற்று முன்தினம் இரவு திடீரென மழை பெய்தது. அந்த நேரத்தில் மும்பை கிராபோர்டு மார்க்கெட்டில் மீன்களை இறக்கி விட்டு லாரி ஒன்று கர்நாடக மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. மேற்கு விரைவு சாலையில் காந்திவிலி பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையில் தேங்கிய மழை நீர் காரணமாக வேகமாக சென்ற லாரி வழுக்கியபடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அந்த நேரத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த இன்னொரு லாரி கவிழ்ந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் சாலையில் கவிழ்ந்த லாரியில் இருந்த டிரைவர் மற்றும் 2 கிளினர்கள் படுகாயம் அடைந்தனர்.
2 கிளினர்கள் பலி
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனையில், கிளினர்கள் 2 பேரும் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. டிரைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவிழ்ந்த லாரி மீது மோதிய லாரியில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
இந்த விபத்தின் காரணமாக மேற்கு விரைவு சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையில் கவிழ்ந்த லாரி கிரேன் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. சம்பவம் குறித்து சம்ந்தா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story