தாய்-மகள் உறவு மேலும் பலப்பட...
குடும்ப உறவுகளில் மிக அழகான உறவு என்பது அம்மா- மகள் இடையே நிலவும் அன்பான உறவுதான்.
உலகில் பெரும்பாலான தாய்- மகள் உறவு தான் நெருங்கிய பந்தத்துடன் அன்பை பகிர்ந்து கொள்கின்றனர் என்ற வாதம் உள்ளது.
இவ்வுறவு ஓர் கசப்பும் இனிப்பும் கலந்த உறவு எனலாம். வாழ்வின் எண்ணற்ற ஏற்ற தாழ்வுகள் ஏற்பட்டாலும் அனைத்து உறவுகளை விட இவர்களின் உறவு அதீத ஆழமானது. குழந்தை பருவத்தில் தன் தாய் செய்யும் அனைத்து பணிகளையும் அப்படியே செய்ய நினைப்பது. அம்மாவின் பிரதிபிம்மாக தன்னை காட்டி கொள்ள விழைகிறாள் மகள். ஐந்து வயதில் தன் தாயை ஒரு தெய்வமாக பாவிக்கிறாள். அதுபோல் தாயின் லிப்ஸ்டிக் முதல் காதணி வரை அனைத்தும் பயன்படுத்தி தன்னை தாயின் ஓஏர் வடிவமாக மாற்றிக் கொள்ள அவள் விழைகிறாள்.
5 வயதில் அம்மாவை தொடர்ந்து சென்று அன்பை பகிரும் அவள் தனது 15 வயதில் தன் தாயை வேற்றுகிரக வாசி போல பார்க்கிறாள். மகள் தன் தாய் தன்னுணர்வை புரிந்து கொள்ள மறுக்கிறாள் எனக் கூறுவாள். மேலும் தன் தாயை இக்காலகட்டத்தில் தன் நம் நண்பர்களுடன் அவள் செலவழிக்கிறாள். இப்பருவ கால வயது முழுவதும் தாய் -மகள் உறவு என்பது மிகவும் சிக்கலானது. ஆனால் சுலபமானது.
தாய்- மகள் உறவில் பிரச்சினைகள்
தாய்- மகள் உறவில் சண்டைகளும் ஏராளமாய் நிகழும். அதற்கு காரணம் தாய் தன் மகளை இன்னும் குழந்தையாக நினைத்து வளர்ப்பதும், அவள் வளர்ந்து பெரியவளாகி விட்டால் என்ற நினைப்பின்றி அவளிடம் பிரச்சினைகளை அணுகும்போது சண்டைகள் எழுகின்றன. இவ்வாறு பிரச்சினைகள் எழும்போது தாய்- மகள் இருவரும் அவரவர் சூழ்நிலையை அவரின் உலகிற்கு சென்று ஆராய்ந்திடல் வேண்டும். இதன் மூலம் இந்த உறவு மிக சிறப்பு வாய்ந்த உறவாக உருவாக வாய்ப்புகள் உள்ளன.
தாய்- மகள் இடையே தகவல் பரிமாற்ற இடைவெளி கூடாது
மிக முக்கியமாய் தாய்- மகளுக்கிடையே எந்த காரணத்தை கொண்டும் தகவல் தொடர்பு பரிமாற்றத்தில் இடைவெளி இருத்தல் கூடாது. ஒரு மகள் தன் தாயிடம் தனது படிப்பை பற்றி, நண்பர்கள் பற்றி, ஆண் நண்பர்கள் பற்றியும் வெளிப்படையாக பேசி தெரிவித்திட வேண்டும்.
தன் தாய் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அவரது பார்வைக்கு ஏற்ப விஷயங்களை கூறி அவரது பாராட்டுதலை பெற முயற்சித்திட வேண்டும். அதே நேரம் தாயும் இக்காலத்திற்கு ஏற்ப தலைமுறை இடைவெளியை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்- தன் மகளை சுதந்திரமாய் செயல்பட விட வேண்டும். அந்த சுதந்திரத்தை அவள் தவறாக பயன்படுத்திட மாட்டாள் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். சிறுசிறு பிரச்சினைகளை அவ்வப்போது உடனே பேசி தீர்த்திட முயன்றால் உண்மையில் உலகிலேயே மிக நெருக்கமான உறவு பிணைப்பு தாய்-மகள் உறவுதான்.
தாய்-மகள் மேலும் பலப்பட
தாய் தன் மகளுடன் குறைந்த அளவில் பேசினாலும் அது அவளுடன் கூடிய அன்பு மற்றும் எந்தவித நிபந்தனையற்ற பேச்சாக இருக்கட்டும். அருகில் அமர்ந்து அவளுடன் சிறு விளையாட்டு, தொலைக்காட்சி பார்ப்பது, வெளியே செல்வதுஎன அவளுடன் நேரத்தை செலவழியுங்கள் என்றும் அவள் கைக்குழந்தை என நினைத்து அவளை தலையாட்டும் பொம்மையாக மாற்ற நினைக்காதீர்கள்.
இரு தலைமுறையை சேர்ந்து சுதந்திரமான பெண்கள் என்பதை உணர்ந்தால் தாய் மகள் உறவில் எந்த பிணக்கும் ஏற்படாது.

Related Tags :
Next Story