காதலிக்க நேரமில்லை - திவ்யா எஸ்.ஐயர்
இது ஒரு வித்தியாசமான காதல். இவர்கள் இருவரும் வித்தியாசமான காதலர்கள். காதலர் சபரி எம்.எல்.ஏ! காதலி திவ்யா எஸ்.ஐயர் ஐ.ஏ.எஸ்.
“இப்படி இரண்டு துறைகளை சேர்ந்த இருவர் இதற்கு முன்பு திருமணத்தில் இணைந்ததில்லை என்று நண்பர்கள் வட்டம் சொல்கிறது. எங்கள் இருவருக்கும் ஒரே வயது, 33. ஜாதகமும் நன்றாக பொருந்தியது. குறிப்பிட்ட இடைவெளியில் மனதும் நன்றாக பொருந்தி விடும். அடுத்த மாதம் திருமணம்” என்கிறார், திவ்யா.
திருவனந்தபுரம் உதவி கலெக்டரான இவர், வேலூர் சி.எம்.சி.யில் எம்.பி.பி.எஸ். முடித்தவர். பின்பு தேர்வு எழுதி ஐ.ஏ. எஸ். ஆனார். பாட்டு, நடனத்தில் தேறியவர். சினிமாவிலும் நடித்திருக்கிறார். சபரி பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. முடித்தவர். தந்தை கார்த்திகேயன் வழியில் அரசியலுக்கு வந்தவர். கேரளாவை சேர்ந்தவர்.
“சபரியின் தாடி நன்றாக இருக்கிறது என்று எப்போதோ என் மனது சொன்னது. பேச்சு, பழக்கவழக்கங்களிலும் சிறந்தவர். எங்கள் இருவருக்கும் காதலிக்க நேரமில்லை. வாட்ஸ்அப் மெசேஜ்கள்தான் எங்கள் காதலை சொல்லிக்கொண்டிருக்கிறது. அதோடு நாங்கள் இருவரும் செய்யும் சேவைகளையும் பரிமாறிக்கொள்கிறோம். ஐஸ்கிரீம் சாப்பிடவும், சினிமாவுக்கு போகவும் எங்களுக்கு நேரமில்லாததால் கல்யாணம் நிச்சயமான பிறகு காதலை தீவிரமாக்கிக்கொள்ளலாம் என்று தீர்மானித்திருக்கிறோம்” என்கிறார் திவ்யா.
இருவருக்கும் பிடித்தமான பின்பு இருவீட்டாரும் கலந்து பேசி திருமணத்தை முடிவு செய்திருக்கிறார்கள்.

Related Tags :
Next Story