நவீன உலகின் முதல் அன்னையர் தினம்
அனா ரீவிஸ் ஜார்விஸ் என்ற சமூக சேவகி போரினால் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், சமாதானத்துக்காகவும் தன் பார்வையற்ற மகளுடன் வாழ்ந்து போராடினார்.
1904-ல் அனா ஜார்விஸ் மறைந்துவிட்டார். அவர் மறைந்த பிறகு தன் தாயின் ஆசைப்படியும், அவரின் நினைவாகவும் 1908-ல் உள்ளூர் சர்ச்சில் அவர் மகள் அனா ஜார்விஸ் மே மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினார். தான் அன்னையை போற்றி நடத்திய வழிபாடு போன்று அனைவரும் தன் அன்னையை வணங்கிட ஓர் நாள் ஏற்படுத்த வேண்டும் எண்ணினார்.
அதனால் அமெரிக்க மாநிலங்களில் அன்னையர் தினம் கொண்டாடவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது அமெரிக்கா முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று அனாமேரி ஜார்விஸ் தொடர்ந்து கோரிக்கை வைக்க 1912-ல் அப்போதைய ஜனாதிபதியான உட்ரோ வில்சன் மூலம் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுகிழமை “அன்னையர் தினம்” கொண்டாடப்படும் என அறிவித்தார்.
இருப்பினும் இந்நாளை வியாபார ரீதியாக பயன்படுத்தி கொள்ளக் கூடாது எனவும் அதற்கெனவும் போராடியவர் அனா மேரி ஜார்விஸ். அதன் பின் உலக நாடுகள் பலவற்றிலும் அன்னையர் தினம் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.
அன்னையர் தின பரிசளிப்பும், கொண்டாட்டமும்:
அன்னையர் தினத்தன்று பெரும்பாலோனோர் வெள்ளை நிற கார்னேஷன் மலர்களை பரிசளிப்பர். மறைந்த தாயாரின் சமாதி மீதும் வெள்ளைநிற கார்னேஷன் மலர்களையே சமர்பிப்பர். தன் தாயிற்கு பிடித்தமான பரிசுபொருட்களை அறிந்து வாங்கித்தருவர். பெரும்பாலும் தாயானவள் தன் பிள்ளையிடம் இருந்து பாசத்தையும் பற்றற்ற அன்பையுமே எதிர் பார்ப்பாள்.
அதனால் நாம் எந்த பரிசளித்தாலும் அவளது அன்பு எனும் பரிசுக்கு ஈடாகாது.
நவீன உலகில் அழகிய வாழ்த்து அட்டைகள், பூக்கள், நினைவு பரிசுகள், நறுமண பொருட்கள், அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் என்றவாறு ஏதேனும் ஒன்றை பரிசளிக்கலாம். அன்னையர் தினத்தில் நாம் பரிசளிப்பது விஷயமல்ல. அன்னையை பாதுகாப்பதும், அவரின் தேவைகளையும், ஆசைகளை பூர்த்தி செய்வதுமே நமது அன்னையர் தின சூளுரையாக இருத்தல் வேண்டும்.

Related Tags :
Next Story