அடையாள அட்டைகள் வழங்கியதில் முறைகேடு என புகார்: “ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுக்க அனுமதிக்காவிட்டால் தீக்குளிப்போம்”
“ரசிகர்களுக்கு அடையாள அட்டை வழங்கியதில் முறைகேடு நடந்து உள்ளது. எனவே, ரஜினிகாந்துடன் புகைப்படம்
சேலம்,
நடிகர் ரஜினிகாந்த் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 19-ந் தேதி வரை சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்கிறார். முதற்கட்டமாக 10 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுக்கப்படுவதாகவும், அடையாள அட்டை உள்ள ரசிகர்கள் மட்டுமே ரஜினிகாந்தை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரசிகர்களுக்கு மாவட்டம் வாரியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், சேலம் மாவட்டத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுபற்றி விசாரணை நடத்துவது தொடர்பாகவும் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அவசர ஆலோசனைக்கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. வக்கீல் ரஜினி செந்தில் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஆடிட்டர் சீனிவாச பெருமாள், ராகவா கனகராஜ், குகை அய்யப்பன், ரங்கன், கார்த்திக், சீனி உள்பட ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முறைகேடு புகார்
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நிர்வாகிகள் கூறியதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடன் புகைப்படம் எடுப்பதற்காக மாவட்டத்திற்கு 250 அடையாள அட்டைகள் வழங்கியுள்ளார். இதனை அதிகப்படுத்தி மாவட்டத்திற்கு 500 ரசிகர்கள் புகைப்படம் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும். சேலம் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 250 அடையாள அட்டைகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. சேலத்தில் இருந்து அனுப்பிய விண்ணப்ப படிவங்களின்படி ரஜினிகாந்தின் உண்மையான ரசிகர்களுக்கு அந்த அடையாள அட்டைகள் கொடுக்காமல் ரசிகர்கள் அல்லாத வேறு நபர்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, நடிகர் ரஜினிகாந்த், இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு உண்மையான ரசிகர்களுக்கு புகைப்படம் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு இல்லாவிட்டால் சேலத்தில் இருந்து 100 ரசிகர்கள் சென்னைக்கு சென்று ரஜினிகாந்த் வீட்டின் முன்பு தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் ஆவேசத்துடன் கூறினர்.
மன்ற தலைவர் விளக்கம்
இந்த முறைகேடு புகார் குறித்து சேலம் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் பழனிவேலுவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
சென்னை தலைமை ரசிகர் மன்ற அலுவலகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுக்க அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதனை முதலில் ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தில் உள்ள நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகளுக்கு வழங்க என்னிடம் தலைமை மன்ற நிர்வாகிகள் கொடுத்தனர். ஆனால், கிளை நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை கொடுக்கப்படவில்லை. இருந்தபோதும், கிளை நிர்வாகிகள் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வருவதால் அவர்களுக்கு 20 அடையாள அட்டைகளை கொடுத்தேன். மற்றபடி முறைகேடு ஏதும் நடைபெறவில்லை. இவை அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டு ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story