தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்று டிரைவர்களை கொண்டு முழுமையாக பஸ்களை இயக்க நடவடிக்கை கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்று டிரைவர்களை கொண்டு முழுமையாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்
தூத்துக்குடி,
அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்து உள்ளனர். இதனால் தூத்துக்குடியில் நேற்று மாலை முதல் மக்களிடையே பதற்றம் நிலவி வருகிறது. மக்கள் விரைவாக தங்களது ஊருக்கு செல்வதற்காக அதிக அளவில் பஸ் நிலையத்துக்கு வந்தனர். தூத்துக்குடி நகர அரசு பஸ் பணிமனையில் உள்ள 65 பஸ்களும் வழக்கம் போல் இயங்கின. அதேபோன்று புறநகர் பஸ் பணிமனையில் ஒரு சில பஸ்கள் நிறுத்தப்பட்டன. சிறிது நேரத்தில் அந்த பஸ்கள் மீண்டும் வேறு ஊருக்கு இயக்கப்பட்டன. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்லும் பஸ்கள் மாலையில் வழக்கம் போல் இயக்கப்பட்டன. வெளியூர்களில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் பஸ்கள் குறைவாகவே வந்தன. இதனால் தூத்துக்குடியில் இருந்து சென்ற அனைத்து பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது. ஸ்ரீவைகுண்டம் பணிமனையில் உள்ள பஸ்கள் வழித்தடத்தை மாற்றி மதுரைக்கு இயக்கப்பட்டன. விளாத்திகுளம் பகுதிக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். அவர்கள் தனியார் பஸ்கள் மூலம் ஊருக்கு சென்றனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) வீரப்பன் கூறியதாவது:-
மாற்று டிரைவர்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் 315 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்கள் அனைத்தும் 100 சதவீதம் இயங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே விடுப்பில் இருந்த அனைத்து டிரைவர்களும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அதே போன்று பஸ்களை மாற்று டிரைவர்களை கொண்டு இயக்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.
தனியார் பள்ளி, கல்லூரி பஸ் டிரைவர்கள், ஆம்னி பஸ் டிரைவர்கள் விவரம் சேரிக்கப்பட்டு உள்ளது. அவர்களை பணிக்கு அழைத்து உள்ளோம். அனைத்து அரசு பஸ் பணிமனைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பஸ்சை எடுக்கும் டிரைவர்களை யாரும் தடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வாட்ஸ்-அப் எண்
மேலும் பஸ் பயணம் தொடர்பாக பயணிகளுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் வாட்ஸ்-அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம். அதன்படி நெல்லை கோட்டத்தில் 94890 52024 என்ற எண்ணிலும், மதுரை கோட்டத்தில் 94875 99019 என்ற எண்ணிலும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை 94450 14436 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) வீரப்பன் தெரிவித்தார்.

Related Tags :
Next Story