கர்நாடகத்தில் மாநில தலைவர் பதவிக்கு காங்கிரசில் கடும் போட்டி இந்த மாத இறுதியில் நியமனம்
கர்நாடகத்தில் மாநில தலைவர் பதவிக்கு காங்கிரசில் கடும் போட்டி எழுந்துள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் கர்நாடக மாநில காங் கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் மாநில தலைவர் பதவிக்கு காங்கிரசில் கடும் போட்டி எழுந்துள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் கர்நாடக மாநில காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 ஆண்டுகளை தாண்டிவிட்டது
கர்நாடக காங்கிரஸ் தலைவராக இருப்பவர் பரமேஸ்வர். இவர் போலீஸ் துறை மந்திரியாகவும் பணியாற்றுகிறார். காங்கிரஸ் தலைவராக பரமேஸ்வர் நியமனம் செய்யப்பட்டு 6 ஆண்டுகளை தாண்டிவிட்டது. சட்டம்-ஒழுங்கை நிலை நிறுத்தும் மிக முக்கியமான பணியை செய்யும் போலீஸ் துறையையும் பரமேஸ்வர் கவனிக்கிறார். இதனால் அவரால் கட்சி பணியை சரிவர செய்ய முடியவில்லை என்று காங்கிரசில் கருத்துகள் எழுந்துள்ளன. அடுத்த ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிக்கு முழுநேர தலைவரை நியமிக்க வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் பெங்களூரு வந்தார். புதிய தலைவர் நியமனம் பற்றி மாவட்ட, மாநில அளவிலான நிர்வாகிகள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களிடம் கருத்துகளை சேகரித்து சென்றுள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு அறிக்கையை தயார் செய்து காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவராக உள்ள பரமேஸ்வர், கர்நாடக சட்டசபை தேர்தல் முடியும் வரை தன்னையே அந்த பதவியில் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே
அதே வேளையில், பாராளுமன்ற காங்கிரஸ் தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கே, மாநில அரசியலுக்கு திரும்ப ஆர்வம் காட்டுவதாகவும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் அமர அவர் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மற்றொருபுறம், கர்நாடகத்தில் பெரும்பான்மையாக உள்ள லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த வட கர்நாடக மூத்த தலைவர் எஸ்.ஆர்.பட்டீல் மற்றும் நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் ஆகியோரில் ஒருவருக்கு கட்சி தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இன்னொருபுறம், மைசூரு மண்டலத்தை சேர்ந்த மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார், தனக்கு கட்சி தலைவர் பதவியை வழங்கினால் அதை திறம்பட நிர்வகிக்க தயாராக இருப்பதாக கூறுகிறார். மேலும் அந்த பதவியை கைப்பற்றும் முயற்சியிலும் அவர் இறங்கியுள்ளார். இவருக்கு கட்சி மேலிடத்தில் தனிப்பட்ட முறையில் நல்ல செல்வாக்கு உள்ளது. முதல்-மந்திரி சித்தராமையா, எஸ்.ஆர்.பட்டீலுக்கு தலைவர் பதவியை வழங்க ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படு கிறது.
தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்
முதல்-மந்திரி பதவியில் அமர வேண்டும் என்ற கனவில் இருக்கும் பரமேஸ்வர், தலைவர் பதவியில் தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்றும், அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவியில் அமர்ந்துவிடலாம் என்றும் கருதுவதாக கூறப்படுகிறது. ஒருவேளை காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே நியமிக்கப்பட்டால், அந்த கனவு நிறைவேறாமல் போகலாம் என்று கருதும் பரமேஸ்வர், கார்கே மாநில அரசியலுக்கு திரும்புவதை தடுக்க முயற்சி செய்கிறார் என்று கூறப்படுகிறது.
இதற்காக முதல்-மந்திரி சித்தராமையாவின் ஆதரவை பெறவும் பரமேஸ்வர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். தலைவர் பதவிக்கு கடும் போட்டி எழுந்துள்ளதால், யாரை நியமித்தால் கட்சிக்கு லாபம் என்பது உள்பட அனைத்து அம்சங்களையும் அலசி ஆராய்ந்து கர்நாடக காங்கிரசுக்கு புதிய தலைவரை அக்கட்சி மேலிடம் இந்த மாத இறுதிக்குள் நியமிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Tags :
Next Story