கொடநாடு எஸ்டேட்டை மாநில அரசு கையகப்படுத்த வேண்டும் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி


கொடநாடு எஸ்டேட்டை மாநில அரசு கையகப்படுத்த வேண்டும் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 15 May 2017 4:30 AM IST (Updated: 15 May 2017 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொடநாடு எஸ்டேட்டை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆதித்தமிழர் கட்சி சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும். மேலும் எஸ்டேட்டை மாநில அரசு கையகப்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் குடும்பங்களுக்கு அரசு வழங்க வேண்டிய ரூ.1,700 கோடி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் போக்குவரத்து துறையில் உள்ள நிதி பற்றாக்குறையை சமாளிக்கவும், பணியில் உள்ள ஊழியர்களின் குறைகளையும் அரசு பேசி தீர்க்க வேண்டும்.

இழப்பீட்டு தொகை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கே.தொட்டியபட்டியில் நடைபெற்ற வன்முறையில் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை அரசு வழங்க வேண்டும். வன்முறையில் 3 குடிசைகள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. அவர்களுக்கு உடனே வீடு கட்டித்தர வேண்டும். மாவட்ட நிர்வாகம் கே.தொட்டியபட்டியில் பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராட்டத்தை கையில் எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story