கர்நாடக காங்கிரசுக்கு புதிய தலைவரை நியமிப்பதில் எந்த குழப்பமும் இல்லை மல்லிகார்ஜுன கார்கே பேட்டி
கர்நாடக காங்கிரசுக்கு புதிய தலைவரை நியமிப்பதில் எந்த குழப்பமும் இல்லை என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
பெங்களூரு,

பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை கூட்டு தலைமையின் கீழ் காங்கிரஸ் எதிர்கொள்ளும். கர்நாடக காங்கிரசுக்கு புதிய தலைவரை நியமிக்கும் விஷயத்தில் கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. தலைவர் பதவியை வழங்குமாறு நான் கேட்கவில்லை. அதற்கான போட்டியிலும் நான் இல்லை. அதற்காக விண்ணப்பிக்கவும் இல்லை. உரிய நேரத்தில் கட்சி முடிவு செய்யும். நாட்டின் எல்லையில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பயத்துடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அண்டை நாடுகள் அடிக்கடி எல்லையில் தாக்குதல் நடத்துகின்றன. எல்லையில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது.
லோக்பால் மசோதா
மத்தியில் பா.ஜனதா அரசு அமைந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் லோக்பால் சட்டத்தை அமல்படுத்தவில்லை. அந்த லோக்பால் மசோதாவை மத்திய அரசு மூலையில் போட்டுவிட்டது. இத்தகைய முக்கியமான மசோதாவை அமல்படுத்த 3 ஆண்டுகள் தேவையா?. ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை மத்திய அரசு குறைத்துவிட்டது. ஆனால் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக போன்ற மாநிலங்களில் அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த மக்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக மோடி கூறினார். ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு கூட வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
மக்களை ஏமாற்றுகிறார்
பொய் வாக்குறுதிகளை கொடுத்து அவர் மக்களை ஏமாற்றுகிறார். உயர்மதிப்பு கொண்டு 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு ரத்து செய்தது.
இதன் மூலம் அந்த பழைய நோட்டுகள் எவ்வளவு திரும்ப வந்தது என்பது குறித்து மத்திய அரசு கணக்கு விவரங்களை வெளியிடவில்லை. இந்த விஷயத்திலும் மக்களை பிரதமர் ஏமாற்றுகிறார்.
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

Related Tags :
Next Story