பத்ராவதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பச்சை கரக ஊர்வலம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
பத்ராவதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பச்சை கரக ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பத்ராவதி,

மாரியம்மன் கோவில்
பத்ராவதி நியூடவுனில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பச்சை கரக திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டும் கடந்த 8-ந்தேதி காலை கணபதி ஹோம பூஜையுடன் பச்சை கரக திருவிழா தொடங்கியது.
இதைத்தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜையும், சண்டிகா ஹோமமும் நடந்து வந்தது. நேற்று முன்தினம் 108 கலசத்துடன் பிரம்ம கலச ஸ்தாபனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பச்சை கரக ஊர்வலம்
இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான பச்சை கரக ஊர்வலம் நேற்று நடந்தது. காலை 8 மணி அளவில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து பச்சை கரக ஊர்வலம் தொடங்கியது. மேள, தாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட பச்சை கரகத்தை கோவில் அர்ச்சகர் சிவக்குமார் நடராஜ் சுமந்து சென்றார். ஆடல், பாடலுடன் பச்சை கரகம் மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான பெண் பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி வந்தனர்.
தேரோட்டம்
இதையடுத்து மாலை 6 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் எழுந்தருளினார். முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இதையொட்டி நேற்று கோவில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story