உத்தரகோசமங்கை அருகே மண்வெட்டியால் சோறு பரிமாறும் திருவிழா
ராமநாதபுரத்தை அடுத்துள்ள உத்தரகோசமங்கை அருகே மண்வெட்டியால் சோறு பரிமாறும் திருவிழா நடந்தது.
ராமநாதபுரம்,
கடவுள் நம்பிக்கை உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் குல தெய்வம் மற்றும் காவல்தெய்வங்கள் உள்ளிட்டவைகளுக்கு நம்பிக்கையின் அடிப்படையில் வேண்டுதல் காரணமாக நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். முடிகாணிக்கை, காவடி, பால்குடம், தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், வேல்குத்துதல் என்று பல்வேறு நேர்த்திக்கடன்கள் செலுத்துவதை காலம்காலமாக பக்தர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
இதேபோல, கோவில்களில் திருவிழாக்களும் தொன்மையான வழக்கப்படி வழிபாடுகளை மேற்கொள்வது வழக்கம். இவ்வாறு ராமநாதபுரத்தை அடுத்துள்ள உத்தரகோசமங்கை அருகே ஒரு கோவிலில் சாமிகும்பிட்டு விநோதமாக பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். உத்தரகோசமங்கை நீர்பாசன கண்மாயின் மேல்கரையில் அமைந்துள்ளது கோவிந்தன்கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அழகர் புறப்பாடாகி இருப்பிடம் சேர்ந்ததும் மண்வெட்டியால் சோறு கிளறி பக்தர்களுக்கு பரிமாறும் திருவிழா கொண்டாடப்படுகிறது.
அறுசுவை சமையல்
இந்த விழாவையொட்டி கோவிலில் 1,800 கிலோ அரிசியில் சோறு வடித்து கோவிலுக்கு அருகில் உள்ள பெரிய அறையில் குவித்து வைத்துவிடுகின்றனர். விழாவில் அதிகாலை முதலே அப்பகுதியை சேர்ந்த பெண்கள் வீட்டிற்கு ஒருவர் வீதம் வந்து சமையல் வேலையை தொடங்கி விடுகின்றனர். ஆண்கள் சோறு சமைக்கும் வேலையை மும்முரமாக செய்கின்றனர். இதில் வெள்ளை பூசணிக்காய் சாம்பார் முக்கிய அம்சமாக இடம்பெறும். 1,800 கிலோ அரிசியில் சோறு சமைத்து பக்கத்து அறையில் கொட்டிவைத்து பெண்கள் சமைத்த அறுசுவையான சமையல் தயாரானதும் தலுகை எனப்படும் அன்னமிடும் நிகழ்ச்சி தொடங்கும்.
இதற்காக கோவில் பூசாரி பயபக்தியுடன் சாமிகும்பிட்டு மண்வெட்டியை தொட்டு கொடுத்தார். இந்த மண்வெட்டியை எடுத்து சென்று கோவில் அறையில் குவித்து வைக்கப்பட்டுள்ள சோற்றினை மண்வெட்டியால் கிளறி எடுத்து கொடுத்து பக்தர்களுக்கு பறிமாறப்பட்டது. இந்த திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சாப்பிட்டனர். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த சிறப்பு திருவிழா முடிந்ததும் வருணபகவான் கருணையால் மழை பொழியும் என்பது ஆண்டாண்டு காலமாக இந்த பகுதியினரால் நம்பப்படுகிறது.
திருவிழா
இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கருணாகரன், அங்குச்சாமி ஆகியோர் கூறியதாவது:- கடந்த 5 தலைமுறைகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த விநோதமான திருவிழாவிற்காக உத்தரகோசமங்கை மங்களநாதர்கோவிலில் தபசு திருநாளன்று மங்களவாத்தியங்கள் முழங்க திரி எடுத்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று நெல், பருப்பு, அரிசி, புளி என தேவையான பொருட்களை மக்களிடம் யாசகமாக பெற்று வந்து அந்த பொருட்களை கொண்டு இந்த திருவிழா நடத்துகிறோம். இந்த திருவிழாவின் நோக்கம் இறைவனுக்கு அன்னம் படைத்து அதன்மூலம் வருணபகவானின் அருள்பெற்று மழைபொழியும் என்பது எங்களின் ஆண்டாண்டு கால நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் கோவிந்தன் கோவிலில் விநோதமான இந்த திருவிழாவை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர். சோற்றினை மண்வெட்டியால் கிளறி பரிமாறப்படும் இந்த வித்தியாசமான திருவிழாவை காணவும், சிறப்புமிக்க சோற்றை சாப்பிடவும் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story