போட்டித்தேர்வில் வெற்றி பெற படிப்பதைவிட எழுதி பார்க்க வேண்டும் மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
போட்டித்தேர்வில் வெற்றி பெற, படிப்பதை விட எழுதிப்பார்ப்பது அவசியம் என்று மாவட்ட வருவாய் அலு வலர் செங்கோட்டையன் அறிவுரை வழங்கினார்.
வேலூர்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 2 ஏ-க்கான போட்டித்தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்வை எழுத விண்ணப்பித்தவர் களுக்கு வேலூரில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் இலவச பயிற்சி தொடங்கியது. மாவட்ட நூலக அலுவலர் ஆனந்தன் தலைமை தாங்கி னார். முதல்நிலை நூலகர் பழனி வரவேற்றார்.
மைய நூலகத்தின் வாசகர் வட்ட தலைவர் ரத்தினவேலு, ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் ராச கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் கலந்து கொண்டு போட்டித்தேர்வு பயிற்சியை தொடங்கி வைத் தார். அப்போது அவர் பேசியதாவது:-
எழுதி பார்க்க வேண்டும்
நாம் எப்போதும் படிப்பு பசியோடு இருக்க வேண்டும். அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. அதற்கு போட்டித் தேர்வு எழுத வேண்டும். போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதற்கு அவசியம் எழுதிப் பார்க்க வேண்டும். 10 முறை படிப் பதற்கு ஒரு முறை எழுதிப் பார்த்தால் போதும்.
உணவு பழக்கவழக்கங் களையும் மாற்றிக் கொள்ள வேண்டும். துரித உணவுகளை (பாஸ்ட்புட்) ஒதுக்கிவிட்டு சாதாரண உணவு வகைகளை சாப்பிட வேண்டும். உடற் பயிற்சி, நடைபயணம், யோகா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். குறைந் தது 6 மணி நேரமாவது தூங்க வேண்டும்.
கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி கவனம் சிதறாமல் படிக்கவேண்டும். தற்போது போட்டிகள் அதிகமாக உள்ளது. கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஆய்வக உதவி யாளர் அரங்கநாதன், கிராம நிர்வாக அலுவலர் தாட்சாயிணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் ரவி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story