அரக்கோணம் அருகே உதவி கலெக்டர், டிரைவரை தாக்கிவிட்டு மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் போலீஸ் விசாரணை
அரக்கோணம் அருகே மணல் கடத்தி சென்ற லாரியை தடுத்த உதவி கலெக்டர் மற்றும் அவரது டிரைவர் ஆகியோரை தாக்கிவிட்டு மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓடிவிட்டது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அரக்கோணம்,
அரக்கோணம் அருகே கிருஷ்ணாபுரம் நந்திஆற்று பகுதியில் இருந்து திருத்தணி வழியாக மணல் கடத்தப்படுவதாக திருத்தணி உதவி கலெக்டர் விமல்ராஜிக்கு நேற்று அதிகாலை ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று காலை 6 மணிக்கு உதவி கலெக்டர் விமல்ராஜ் மற்றும் அவரது டிரைவர் பிரபாகர் ஆகியோர் திருத்தணியில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் நந்திஆற்று பகுதிக்கு வந்தனர். அங்கு அரக்கோணம்- திருத்தணி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த லாரியை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
உதவி கலெக்டர்-டிரைவர் மீது தாக்குதல்
அப்போது லாரியில் மணல் கடத்தி வந்த 8 பேர் கொண்ட கும்பல் லாரியில் இருந்து கீழே இறங்கி வந்து உதவி கலெக்டரை கீழே தள்ளினர். இதனை தடுக்க வந்த டிரைவர் பிரபாகரை சரமாரியாக தாக்கினர். மேலும் எங்களை பின்தொடர வேண்டாம் என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து லாரியுடன் தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த டிரைவர் பிரபாகர் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் தப்பி ஓடிய மணல் கடத்தல் கும்பலை அரக்கோணம் மற்றும் திருத்தணி போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story