செந்துறையில் கோவில் நிலத்தை மீட்டு தரக்கோரி கிராமமக்கள் போராட்டம்


செந்துறையில் கோவில் நிலத்தை மீட்டு தரக்கோரி கிராமமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 15 May 2017 3:00 AM IST (Updated: 15 May 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் ஊராட்சிக்கு உட்பட்டது செங்கமேடு கிராமம்

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் ஊராட்சிக்கு உட்பட்டது செங்கமேடு கிராமம். இந்த கிராமத்திற்கு சொந்தமான பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் பெயரில் 2 ஏக்கரில் பட்டா நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து கடைகள் கட்டி உள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் வருவாய்த்துறை மற்றும் அதிகாரிகளுக்கு புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் கடந்த மாதம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று கோவில் நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கும் பணியில் அப்பகுதி பொதுமக்கள் ஈடுபட்டனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் செங்கமேடு கிராமமக்கள் பிரச்சினைக்கு உரிய இடத்தில் பந்தல் அமைத்து அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தளவாய் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருவாய்த்துறையினரும், போலீசாரும் கோவில் நிலத்தை மீட்டு கம்பி வேலி அமைத்து தரும் வரை இரவு பகலாக போராட்டத்தை தொடரப் போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். 

Next Story