மன்னர்கள் காலத்தில் வாடிவாசலாக இருந்த வாடிப்பட்டி ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன
மன்னர்கள் காலத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது வாடிவாசலாக இருந்து, காலப்போக்கில் வாடிப்பட்டியாக மாறியதை நினைவு கூறும் வகையில், வாடிப்பட்டியில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்தது
வாடிப்பட்டி,
மதுரையை அடுத்துள்ள வாடிப்பட்டி, பாண்டிய மற்றும் நாயக்க மன்னர்களின் ஆட்சியின் போது, வீரத்தின் வெளிப்பாடாக நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான, வாடிவாசலாக இருந்தது என்று வரலாறு கூறுகிறது. காலப்போக்கில் பெயர் மருவி வாடிவாசல் என்பது வாடிப்பட்டியாக மாறியது என்றும் கூறப்படுகிறது. குலசேகரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட கோட்டை சுவர் அருகில் இருந்த செல்லாயி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு விழா, கால மாற்றத்தால் தடைபட்டு போனது.
அந்த பழமையான வரலாற்றை நினைவு கூறும் வகையில் கிராம பொதுமக்கள் மற்றும் வாடிவாசல் நண்பர்கள் சார்பில் நேற்று வாடிப்பட்டி குலசேகரன்கோட்டையில் உள்ள செல்லாயி அம்மன் கோவில் பின்புறம் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது.
காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி மாலை 4 மணி வரை நடந்தது. இந்த ஜல்லிக்கட்டிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி பழனிக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் தாசில்தார் வீரபத்திரன், சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாராம், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, மண்டல துணை தாசில்தார் நாகேந்திரன், துணை தாசில்தார் கமலேஷ், வருவாய் ஆய்வாளர் முத்துசங்கர், கிராம நிர்வாக அலுவலர் குருபாண்டி, முன்னாள் பேரூர் தி.மு.க. செயலாளர் பால்பாண்டியன் உள்பட கிராமபொதுமக்கள் கலந்துகொண்டனர்.
பரிசு பொருட்கள்
இதில் 2 மணி நேரத்திற்கு ஒரு சுற்று என்று கணக்கிடப்பட்டு வீரர்கள் களமிறங்கினர். ஒரு சுற்றுக்கு 75 மாடுபிடி வீரர்கள் நீலம், மஞ்சள், சிவப்பு, சிமெண்ட் கலர்களில் பணியன்கள் அணிந்து அனுமதிக்கப்பட்டனர். இதில் தங்கம், வெள்ளி, குத்துவிளக்கு, அண்டா, ஆடு, மின்விசிறி, கட்டில், சைக்கிள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
இதனை பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களும், மாடுகளை பிடித்த வீரர்களும் பெற்று சென்றனர். முன்னதாக 356 மாடுபிடி வீரர்களுக்கு கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஹரிபிரசாத் தலைமையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. வாடிப்பட்டி கால்நடை மருத்துவமனை டாக்டர் கருப்புச்சாமி தலைமையில் 601 மாடுகளுக்கு மருத்துவபரிசோதனை நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை வாடிவாசல் நண்பர்கள் மற்றும் குலசேகரன்கோட்டை கிராமபொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா தலைமையிலும், சுகாதாரபணி மற்றும் குடிநீர் ஏற்பாடுகளை பேரூராட்சியினரும், மருத்துவ முதலுதவி ஏற்பாடுகளை கச்சைகட்டி, வாடிப்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினரும் செய்திருந்தனர்.
28 பேர் காயம்
ஜல்லிக்கட்டின் போது மாடுகள் முட்டியதில், இடையபட்டி அசோக் (வயது 17), குலசேகரன்கோட்டை பெரியணன் (65), ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜா (23), தமிழரசன் (24), தனக்கன்குளம் ரகு (27) உள்பட 28 பேர் காயமடைந்தனர். அதில் 8 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
வெள்ளைமலைப்பட்டி
உசிலம்பட்டி அருகே உள்ளது வெள்ளைமலைப்பட்டி. இந்த ஊரில் கடந்த 20 வருடங்களுக்கு பின்பு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதை உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர், ஆதிதிராவிடர் நலத்துறை (பொறுப்பு) முருகைசெல்வி தொடங்கிவைத்தார். இதில் கலந்து கொள்ள 512 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதில் 241 காளைகள் பங்கேற்றன.
ஜல்லிக்கட்டில் 300 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். நிகழ்ச்சியில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்கள், காளைகளை பிடித்த மாடுபிடிவீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில் 116 பேர் காயமடைந்தனர். தீயணைப்புத்துறை, 108 ஆம்புலன்ஸ், கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ், மருத்துவத்துறை சார்பில் முதலுதவி வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், விழா கமிட்டியினர், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story