பேரையூர் அருகே நர்சு கொலை: மேலும் 2 பேர் கைது
பேரையூர் அருகே நடந்த நர்சு கொலையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேரையூர்,
பேரையூர் அருகே உள்ள வீராளம்பட்டியைச் சேர்ந்தவர் பெரியகார்த்திகேயன்(வயது 52), இவரின் மனைவி செல்லம்மாள்(48). இவர்களுடைய மகள் சுகன்யா(21). இவர் ஈரோடு அருகேயுள்ள சித்தோடில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்தார். அங்கு அதே ஊரைச் சேர்ந்த பூபதி பெயிண்டராக வேலை செய்த போது, 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்ததால், சுகன்யாவின் பெற்றோர், அவர்களின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாமல், சுகன்யாவை, பூபதியிடம் இருந்து பிரித்து வீட்டிற்கு அழைத்துசென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெண்ணை போலீசார் ஒப்படைக்க கூறியதும், அங்குள்ள ஓடைப்பகுதியில் சுகன்யாவை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்று தடயம் இல்லாமல் செய்தனர்.
மேலும் 2 பேர் கைது
இது சம்பந்தமாக சேடபட்டி போலீசார் நேற்றுமுன்தினம் சுகன்யாவின் தந்தை பெரியகார்த்திகேயன், அண்ணன்கள் சின்னச்சாமி (26), சுந்தரம், தாய் செல்லம்மாள், அத்தை லட்சுமி(56), தம்பி பாண்டிக்கண்ணன் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பெரியகார்த்திகேயன், லட்சுமி ஆகியோரை கைது செய்தனர். மேலும் செல்லம்மாள், சின்னச்சாமி, பாண்டிக்கண்ணன், சுந்தரம் ஆகிய 4 பேரை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று சின்னச்சாமி, தாய் செல்லம்மாளை போலீசார் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து கைதான 4 பேரையும் போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்தநிலையில் சுகன்யாவின் தந்தை பெரியகார்த்திகேயன் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:- எனது மகள் சுகன்யாவை நன்றாக படிக்க வைத்து வேலைக்கு அனுப்பினோம். அவளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் எனது மகள் வேறு திருமணம் செய்துகொண்டாள். நான் அதனை கண்டித்தேன்.
விஷம் கொடுத்து கொன்றோம்
எங்கள் அனைவரது பேச்சையும், அவள்கேட்காமல் திருமணம் செய்ததால் சுகன்யாவை வெறுத்தோம். அவள் உயிரோடு இருக்கக்கூடாது என்று நானும், குடும்பத்தினரும் முடிவெடுத்தோம். அதன்படி சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு எனது அக்கா லட்சுமியுடன், சுகன்யாவை வேறு ஊருக்கு போகலாம் என்று அனுப்பி வைத்தோம்.
பின்னர் கணக்கண்பாறை ஓடை அருகே நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, விஷத்தை பலவந்தமாக சுகன்யாவின் வாயில் ஊற்றினோம். உடனே மயங்கி விழுந்த சுகன்யா, சிறிது நேரத்தில் இறந்தவிட்டாள். பின்னர் அவளின் உடலில் டயரை போட்டு, பெட்ரோலை ஊற்றி எரித்துவிட்டோம். அதற்கான தடயங்கள் எதுவும் இருக்கக்கூடாது என்று கருதி, அங்கிருந்த எலும்புகளை எடுத்து தூர வீசினோம். இவ்வாறு அவர் கூறியதாக, போலீசார் தெரிவித்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள பாண்டிக்கண்ணன், சுந்தரம் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story