புதுக்கோட்டையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கினர், பெரும்பாலான பஸ்கள் இயங்காததால் பயணிகள் கடும் அவதி
அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் புதுக்கோட்டையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கினர்
புதுக்கோட்டை
அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் புதுக்கோட்டையில் போக்குவரத்து தொழிலா ளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கினர். பெரும்பாலான பஸ்கள் இயங்காததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
வேலை நிறுத்தம்
போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாததால் நேற்று மாலை 4 மணி முதல் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, பொன்னமராவதி, இலுப்பூர் பகுதிகளில் இயங்கி வந்த அரசு நகர பஸ்கள், புற நகர் பஸ்களை போக்குவரத்து தொழிலாளர்கள், பணிமனைகளில் நிறுத்தி விட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை.
பயணிகள் பரிதவிப்பு
இதனால் புதுக்கோட்டை பஸ் நிலையத்தில், வெளியூருக்கு செல்வதற்கும், தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கும் காத்திருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க புதுக்கோட்டை போக்குவரத்து கழக பணிமனை முன்பாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story