திருமாநிலையூரில் திறக்கப்பட்ட மதுபானக்கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மூடப்பட்டது
திருமாநிலையூரில் திறக்கப்பட்ட மதுபானக்கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மதுபானக்கடை மூடப்பட்டது.
கரூர்
நெடுஞ்சாலையோரம் இருந்த மதுபானக்கடைகள் கோர்ட்டு உத்தரவுப்படி மூடப்பட்டன. அதன்படி கரூர் மாவட்டத்தில் ஏராளமான மதுபானக்கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் மூடப்பட்ட மதுபானக்கடைகளுக்கு பதில் வெவ்வேறு இடங்களில் மதுபானக்கடைகள் திறக்க முயலும்போது அதற்கு அந்தந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் திறக்கப்படாமலேயே மதுபானக்கடைகள் மூடப்படுகின்றன. இந்த நிலையில் கரூர் அருகே உள்ள திருமாநிலையூரில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபானக்கடை ஒன்று திறக்கப்பட்டது.
தர்ணா போராட்டம்
அந்த கடை திறந்தது முதல் கடையை மூடக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் பல முறை கோரிக்கை வைத்தும் மதுபானக்கடை மூடப்படவில்லை. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு கடை ஊழியர்கள் கடையை திறந்தனர். அப்போது பொதுமக்கள் பலர் மதுபானக்கடை முன்பு கூடி கடையை மூடக்கோரி தர்ணா போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் தமிழரசி மற்றும் பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மதுபானக்கடையை மூடினர். தொடர்ந்து இனிமேல் இந்த பகுதியில் மதுபான கடை செயல்படாது என்று அதிகாரிகள் கூறியதைத்தொடர்ந்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story