கீழ்வேளூர் பகுதியில் குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம்
கீழ்வேளூர் பகுதியில் உள்ள குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்க பள்ளி
கீழ்வேளூர்,
தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கீழ்வேளூர் வட்டார செயற்குழு கூட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் ராம கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்ரா, மாவட்ட தலைவர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சண்முகசுந்தரம் வரவேற்றார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வருகிற கல்வியாண்டில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலும் யோகாசன பயிற்சி வகுப்புகளை மாணவர்களுக்கு தீவிரமாக கற்று கொடுப்பது. கீழ்வேளூர் பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் நீர்நிலைகள் கிராம சமுதாயத்திற்கு சொந்தமானது என்பதால் தூர்வாரப்படாமல் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன்கருதி அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மேற்கண்ட குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாற்று டாக்டர்கள்
காரைக்காலில் இருந்து பெங்களூரு வரை செல்லும் விரைவு பயணிகள் ரெயில் தினமும் அதிகாலை 4 மணிக்கு கீழ்வேளூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ரெயில்வே துறை நடவடிக்கை எடுப்பதுடன், அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் கீழ்வேளூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஆசிரியர் கூட்டணியின் வட்டார துணை தலைவர் மணிவாசகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஐயப்பன், ஆரோக்கியமேரிகேசரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் அருள்முருகன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story