பெங்களூருவில் பெல்லந்தூர் ஏரியை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
பெங்களூருவில் பெல்லந்தூர் ஏரியை தூய்மைப் படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நவீன எந்திரங்கள் மூலம் ஆகாயத்தாமரைகள் மற்றும் செடி-கொடிகள் அகற்றப்படுகிறது.
பெங்களூரு,

சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு
பெங்களூரு பெல்லந்தூரில் சுமார் 900 ஏக்கர் பரப்பளவில் ஏரி பரந்து விரிந்து உள்ளது. அந்த ஏரியை சுற்றிலும் பல்வேறு தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுநீர் அந்த ஏரியில் வந்து கலக்கிறது. ரசாயனம் கலந்த அந்த கழிவு நீரால் ஏரியில் நுரை பொங்கி, அந்த பகுதி முழுவதும் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம், பெல்லந்தூர் ஏரியில் கழிவுநீரை விடும் தொழிற்சாலைகளை மூடும்படி உத்தரவிட்டது. அதன்படி அந்த தொழிற்சாலைகளை மூடும் பணியை மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வருகிறது. மேலும் பெல்லந்தூர் ஏரியை முழுமையாக தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
நவீன எந்திரங்கள் மூலம்...
அதன்படி அந்த ஏரியை தூய்மைப்படுத்தும் பணி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள நவீன எந்திரங்கள் மூலம் ஏரியில் ஆள் உயரத்திற்கு வளர்ந்து நிற்கும் செடி-கொடிகள், ஆகாயத்தாமரைகள் மற்றும் கழிவுகளை அகற்றும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி இன்னும் பல மாதங்கள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story