சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் காவிரியில் தண்ணீர் திறக்க முடியாத நிலையில் உள்ளோம் முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் காவிரியில் தண்ணீர் திறக்க முடியாத நிலையில் உள்ளோம் முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 15 May 2017 3:07 AM IST (Updated: 15 May 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் காவிரியில் தண்ணீர் திறக்க முடியாத நிலையில் உள்ளோம் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

கொள்ளேகால்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் காவிரியில் தண்ணீர் திறக்க முடியாத நிலையில் உள்ளோம் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

தனியார் மருத்துவமனை திறப்பு


சாம்ராஜ்நகர் டவுனில் புதிதாக கட்டப்பட்டு உள்ள தனியார் மருத்துவமனையின் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியை அவர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-

எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் இதுவரை 6 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டு உள்ளன. அடுத்த வருடம் புதிதாக மேலும் 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும்.

கிராமப்புற மாணவ-மாணவிகளும் மருத்துவம் பயின்று டாக்டர்கள் ஆக வேண்டும் என்பதே எங்கள் லட்சியம். தற்போது புதிதாக தொடங்கப்பட்டு உள்ள மருத்துவமனையில் அதிநவீன எக்ஸ்-ரே மையம், 2 அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகத்திற்கு தண்ணீர்

இதனை தொடர்ந்து சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கடந்த 4 ஆண்டுகளில் எனது தலைமையிலான அரசு சிறப்பான நிர்வாகத்தை கொடுத்து உள்ளது என்று கூறியுள்ளார். அது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு பலமுறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு இதுவரை தண்ணீர் திறந்துவிட வில்லை. ஏனெனில் நம்மிடம் தண்ணீர் இல்லை. நாட்டின் உயர்ந்த கோர்ட்டு உத்தரவிட்டும் காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாத சூழ்நிலையில் நாம் உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது மந்திரிகள் யு.டி.காதர், பசவராஜ் ராயரெட்டி, மகாதேவப்பா உள்பட பலர் உடன் இருந்தனர். 

Next Story