கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 15 May 2017 3:16 AM IST (Updated: 15 May 2017 3:15 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர், போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்,

கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இந்த நிலையில் வாரவிடுமுறை என்பதால் கடந்த 2 நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நேற்று அதிகாலையில் இருந்தே வாகனங்களின் வரத்து தொடங்கியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நகரின் நுழைவு வாயிலான செண்பகனூர் முதல் ஏரிச்சாலை வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையொட்டி பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போக்குவரத்தினை சீரமைத்தனர். இருப்பினும் சுற்றுலா இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story