பொதுஇடங்களை அசுத்தப்படுத்தியதாக 5 லட்சம் பேரிடம் இருந்து ரூ.7 கோடி அபராதம் வசூல்
மும்பையில் கடந்த 10 மாதங்களில் பொதுஇடங்களை அசுத்தப்படுத்தியதாக 5 லட்சம் பேரிடம் இருந்து அபராதமாக ரூ.7¾ கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

கிளின்அப் மார்ஷல்கள்
மும்பை மாநகராட்சியின் கிளின்அப் மார்ஷல்கள் (தூய்மை பணியாளர்கள்) பொதுஇடங்களை அசுத்தப்படுத்துபவர்களை பிடித்து அபராதம் வசூலித்து வருகின்றனர். மும்பை நிர்வாக வசதிக்காக 24 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வார்டுக்கு 30 கிளின்அப் மார்ஷல்கள் அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொது இடத்தில் குப்பைகளை கொட்டுபவர்கள், எச்சில் துப்புபவர்கள், சிறுநீர், மலம் கழிப்பவர்கள் உள்ளிட்டவர்களை பிடித்து கிளின்அப் மார்ஷல்கள் அபராதம் விதித்து வருகின்றனர்.
ரூ.7¾ கோடி வசூல்
இவர்கள் கடந்த 10 மாதத்தில் மட்டும் மும்பையில் சுமார் 5 லட்சம் பேரை பிடித்து அபராதம் விதித்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.7 கோடியே 90 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மட்டும் அதிகபட்சமாக ரூ.1 கோடியே 10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சராசரியாக மாதத்திற்கு ரூ.80 லட்சம் அபராதம் மூலம் மாநகராட்சிக்கு வருமானம் கிடைத்துள்ளது.
அபராதம் நோக்கமல்ல...
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. விழிப்புணர்வு ஏற்படுத்தியே வருகிறோம். பிடிபடும் அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படுவதில்லை. பிடிபட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை எச்சரித்து அனுப்பி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story