புதுவை அருகே நடந்த மேற்கு வங்க தொழிலதிபர் கொலையில் மனைவி, கள்ளக்காதலன் கைது
புதுவை அருகே நடந்த மேற்கு வங்க தொழிலதிபர் கொலையில் மனைவி, கள்ளக்காதலன் கைது, கள்ளத் தொடர்பை கண்டித்ததால் கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம்
புதுச்சேரி,
புதுவை அருகே நடந்த மேற்கு வங்க தொழிலதிபர் கொலையில் மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ததாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து இருப்பது தெரியவந்துள்ளது.
தொழிலதிபர்
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் விவேக் பிரசாத் (வயது 40). இவர் தொழில் தொடங்க முடிவு செய்து கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி வந்தார். ரெட்டியார்பாளையம் ராகவேந்திரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி ஜெயந்தி (35) மற்றும் குழந்தைகளுடன் குடியேறினார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் 1½ ஏக்கர் நிலம் வாங்கி அங்கு தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர்பான பாட்டில்களுக்கான மூடி தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். அங்கு இதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன. இந்த பணிகளை சுல்தான்பேட்டையை சேர்ந்த பாபு என்கிற ஷேக் முகமது (40) என்பவர் கவனித்து வந்தார்.
சாவியுடன் நின்ற மோட்டார் சைக்கிள்
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற விவேக் பிரசாத் மாயமானார். அதன்பிறகு அவர் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி ஜெயந்தி புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் புதுவை வம்பாக்கீரப்பாளையம் கடற்கரை பகுதியில் விவேக் பிரசாத்தின் மோட்டார் சைக்கிள் சாவியுடன் கேட்பாரற்று நிற்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று அந்த மோட்டார் சைக்கிளை மீட்டனர்.
கொலை செய்யப்பட்டது உறுதி
இதனை தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் உத்தரவின் பேரில் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் தலைமையில் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து விவேக் பிரசாத் மாயமான விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து பாபுவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் இந்த கொலை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். மீண்டும் பாபுவை விசாரணைக்கு அழைத்த போது அவர் தலைமறைவானார்.
இதை தொடர்ந்து கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த மேஸ்திரி கணபதியிடம் விசாரித்ததில் துப்பு துலங்கியது. அதாவது விவேக் பிரசாத்துக்கு உதவியாக இருந்த பாபு தன்னை போனில் அழைத்து வரச்சொன்னார்.
அதன்பேரில் அவரிடம் சென்று பேசியதில் விவேக் பிரசாத்தை கொலை செய்து விட்டதாகவும் இந்த விவகாரத்தில் தனக்கு உதவும்படி அவர் கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து தப்பி வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
உடல் மீட்பு
இதனைதொடர்ந்து போலீசாருக்கு சந்தேகம் அதிகமானது. இந்தநிலையில் மேஸ்திரி கணபதியை அழைத்துக் கொண்டு கட்டுமானப்பணி நடந்த இடத்துக்கு போலீசார் சென்றனர். அங்கு கட்டப்பட்டு இருந்த கழிவறை தொட்டியில் இருந்து விவேக் பிரசாத்தின் உடல் மீட்கப்பட்டது. அவரை கொலை செய்து உடலை அங்கு மணல் போட்டு மூடி மறைத்து இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பாபு சுல்தான்பேட்டை பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் உடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் பாபுவுக்கும், விவேக் பிரசாத்தின் மனைவி ஜெயந்திக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதுபற்றிய விவரம் தெரியவந்ததால் அவர்களை விவேக் பிரசாத் கண்டித்துள்ளார். இதனால் இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்து இருப்பது விசாரணையில் அம்பலமானது. இதனை தொடர்ந்து ஜெயந்தியையும் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறு
கைதான பாபு வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மேற்கு வங்கத்தில் இருந்து கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு விவேக் பிரசாத் குடும்பத்துடன் புதுச்சேரி வந்தார். புதிதாக குடி வந்த போது வீட்டில் உள்ள வேலைகளை பார்க்க சென்ற எனக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் பூத்துறையில் தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர்பான பாட்டில்களுக்கான மூடி தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்க முடிவு செய்தார். அந்த பணிகளை நான் பார்த்து வந்தேன்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கும் விவேக் பிரசாத்தின் மனைவி ஜெயந்திக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி தனிமையில் சந்தித்து நாங்கள் உல்லாசம் அனுபவித்து வந்தோம். இதுபற்றி அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஜெயந்தியை விவேக் பிரசாத் கண்டித்துள்ளார்.
கொலை செய்ய திட்டம்
இதுபற்றி ஜெயந்தி என்னிடம் கூறி வருத்தப்பட்டார். இதனால் முன்பு போல் அவரை சந்திப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இந்தநிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவர் விவேக் பிரசாத்தை கொலை செய்தால் தான் இருவரும் சந்தோஷமாக இருக்க முடியும் என்று ஜெயந்தி என்னிடம் கூறினார். நானும் அதற்கு சம்மதம் தெரிவித்து அதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்து இருந்தேன்.
கடந்த மே1-ந் தேதி தொழிலாளர் தினம் என்பதால் கட்டுமானப் பணிக்கு விடுமுறை. தொழிற்சாலை கட்டிடப் பணிக்கு யாரும் வர மாட்டார்கள் என்பதால் இதை பயன்படுத்தி விவேக் பிரசாத்தை கொலை செய்து உடலை அங்கு கொண்டு சென்று புதைத்து விடலாம் என்று திட்டமிட்டேன்.
குத்திக் கொலை
எதிர்பார்த்தது போல் அன்றைய தினம் விவேக் பிரசாத் பூத்துறையில் தொழிற்சாலை கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கும் இடத்திற்கு வந்தார்.
அங்கு ஏற்கனவே நான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் அவரை குத்தினேன். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து செத்தார். இதன்பின் அவரது உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டினேன்.
அங்கு கட்டப்பட்டு இருந்த கழிவறை தொட்டியில் உடலைப் போட்டு மறைத்தேன். முழுவதுமாக மண்ணைப் போட முடியாததால் அங்கு இருந்தபடியே வேலை ஆட்களை வரவழைத்து பொக்லைன் எந்திரம் மூலம் உடல் கிடந்த இடத்தில் மண்ணைப் போடச் செய்தேன். இதுகுறித்து அவர்கள் கேட்டபோது சொன்னதை செய்யுங்கள் என்று உத்தரவிட்டேன். அவர்களும் மறுபேச்சின்றி மண்ணை கொட்டி மூடி விட்டுச் சென்றனர். இனி பிரச்சினை வராது என்று கருதி அங்கு இருந்து புறப்பட்டேன்.
தற்கொலை நாடகம்
விவேக் பிரசாத் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசையும் மற்றவர்களையும் நம்ப வைப்பதற்காக அவரது மோட்டார் சைக்கிளை அங்கு இருந்து எடுத்துக்கொண்டு நேராக வம்பாகீரப்பாளையம் கடற்கரை பகுதியில் விட்டு விட்டுச் சென்று விட்டேன். அந்த இடத்தில் மோட்டார் சைக்கிள் நின்று இருந்ததால் அருகில் உள்ள கடலில் குதித்து விவேக் பிரசாத் தற்கொலை செய்து இருக்கலாம் என்று நம்ப வைக்க திட்டமிட்டு ஹெல்மெட்டை கடலில் வீசினேன்.
அதன்பிறகு அங்கிருந்து சென்று விட்டேன். போலீசார் என்னை விசாரித்தனர். முதலில் இந்த கொலை குறித்து எதுவும் தெரியாது என்று கூறினேன். தொடர்ந்து போலீசார் தீவிரம் காட்டியதால் தலைமறைவானேன். இந்தநிலையில் சுல்தான்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த போலீசார் என்னை கைது செய்தனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story