குரங்குகள் துரத்தியதால் புள்ளிமான் மலையில் இருந்து கீழே விழுந்து பலி


குரங்குகள் துரத்தியதால் புள்ளிமான் மலையில் இருந்து கீழே விழுந்து பலி
x
தினத்தந்தி 15 May 2017 4:14 AM IST (Updated: 15 May 2017 4:14 AM IST)
t-max-icont-min-icon

குரங்குகள் துரத்தியதால் புள்ளிமான் ஒன்று மலையில் இருந்து தவறி விழுந்து செத்தது.

மும்பை,

குரங்குகள் துரத்தியதால் புள்ளிமான் ஒன்று மலையில் இருந்து தவறி விழுந்து செத்தது.

புள்ளிமான் உடல்


மும்பை முல்லுண்டு மேற்கு, சஞ்சய் காந்தி தேசிய பூங்கா எல்லைப்பகுதியில் புள்ளிமான் ஒன்று செத்து கிடப்பதாக நேற்று முன்தினம் விலங்குகள் நல அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற அவர்கள் புள்ளி மானின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இந்தநிலையில் புள்ளிமான் எப்படி பலியானது என்பது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-

குரங்குகள் துரத்தின

புள்ளிமான் தனது கூட்டத்தில் இருந்து தனித்துவிடப்பட்டு சென்று கொண்டு இருந்தது. தனியாக சென்று கொண்டு இருந்த புள்ளிமானை அங்கு கூட்டமாக வந்த சிங்கவால் குரங்குகள் துரத்தின. இதனால் பயந்து ஓடிய புள்ளிமான் அந்த பகுதியில் உள்ள மலை குன்றின் உச்சியில் இருந்து தவறி கீழே விழுந்தது. இதனால் அதற்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

24 மணி நேரத்தில் 2-வது மான்

இந்தநிலையில் சஞ்சய் காந்தி தேசிய பூங்கா டாக்டர்கள் நடத்திய உடற்கூறு பரிசோதனையில் புள்ளிமான் விலா எலும்பில் ஏற்பட்ட காயம், ரத்த இழப்பு, உள்உறுப்புகளில் ஏற்பட்ட ரத்த கசிவு ஆகிய காரணங்களால் பலியானது தெரியவந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கோரேகாவ், மேற்கு விரைவு நெடுஞ்சாலையில் ஆட்டோ மோதி புள்ளிமான் ஒன்று பலியானது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் மற்றொரு புள்ளிமான் மலைகுன்றில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story