மதுராந்தகம் அருகே பஸ் - கார் மோதல்; மாணவி பலி


மதுராந்தகம் அருகே பஸ் - கார் மோதல்; மாணவி பலி
x
தினத்தந்தி 15 May 2017 4:18 AM IST (Updated: 15 May 2017 4:18 AM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகம் அருகே பஸ்- கார் மோதிய விபத்தில் மாணவி பலியானார்.

மதுராந்தகம்

சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் கீர்த்தனா (வயது 15). இவர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். அதே பகுதியை சேர்ந்த தனது உறவினரான ரமேஷ் (26) என்பவருடன் புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு காரில் திரும்பி கொண்டிருந்தார். நேற்று அதிகாலை மதுராந்தகம் சாலையில் முன்னால் சென்ற பஸ் மீது இவர்களது கார் மோதியது.

இதில் கீர்த்தனா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த ரமேஷ் படுகாயம் அடைந்தார்.

போக்குவரத்து பாதிப்பு

தகவல் அறிந்த மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த ரமேஷ் மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தால் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story