கேளம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே பெட்ரோல் பங்க்கில் ரூ.1½ கோடி மோசடி, 2 ஊழியர்கள் கைது


கேளம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே பெட்ரோல் பங்க்கில் ரூ.1½ கோடி மோசடி, 2 ஊழியர்கள் கைது
x
தினத்தந்தி 15 May 2017 4:22 AM IST (Updated: 15 May 2017 4:21 AM IST)
t-max-icont-min-icon

கேளம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே பெட்ரோல் பங்க்கில் ரூ.1 கோடியே 48 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருப்போரூர்,

கேளம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே பெட்ரோல் பங்க் நடத்தி வருபவர் ராதாகிருஷ்ணன். இவர் பெட்ரோல் பங்க் வரவு-செலவு கணக்கு களை சரிபார்த்தார். அப்போது ரூ.1 கோடியே 48 லட்சம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு எட்வர்டு, இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதில் பெட்ரோல் பங்க்கில் ஊழியர்களாக வேலை பார்த்த திருவண்ணாமலையை சேர்ந்த மனோகரன், சதீஷ்குமார் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.

கைது

அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான சதீஷ்குமார் தையூரில் தங்கி பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

Next Story