பெண் தற்கொலை வழக்கில் திருப்பம்: கழுத்தை நெரித்து கணவர் கொலை செய்தது அம்பலம்


பெண் தற்கொலை வழக்கில் திருப்பம்: கழுத்தை நெரித்து கணவர் கொலை செய்தது அம்பலம்
x
தினத்தந்தி 15 May 2017 4:26 AM IST (Updated: 15 May 2017 4:26 AM IST)
t-max-icont-min-icon

விராரில் பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவரை கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.

மும்பை,

விராரில் பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவரை கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.

தூக்கில் தொங்கிய பெண்

பால்கர் மாவட்டம் விரார் மன்வாலேபாடா பகுதியை சேர்ந்தவர் ஜான்சாமுவேல். இவரது மனைவி ரேணு (வயது35). கடந்த திங்கட்கிழமை இரவு ரேணு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே ரேணுவின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் ஜான்சாமுவேலை கைது செய்து விசாரணை நடத்தினர்.

2-வது திருமணம்

இந்தநிலையில் ரேணுவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜான்சாமுவேலிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொன்றது அம்பலமானது.

ஜான்சாமுவேல், ரேணு 2 பேருக்கும் இது 2-வது திருமணமாகும். இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளான். மேலும் ரேணுவின் முதல் கணவருக்கு பிறந்த 7 வயது மகனும் இவர்களுடன் வசித்து வந்தான்.

நாடகமாடினார்

சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் ஜான்சாமுவேல் 7 வயது வளர்ப்பு மகனை பொருட்கள் வாங்கி வருமாறு கூறி கடைக்கு அனுப்பி உள்ளார். 2 வயது மகன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தான். அப்போது அவர் மனைவி ரேணுவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் மனைவியின் உடலை மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டு விட்டு தற்கொலை நாடகம் ஆடியுள்ளார்.

ஜான்சாமுவேல் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் மனைவியை கொன்று நாடகமாடி உள்ளார். ஆனால் என்ன காரணத்திற்காக மனைவியை கொன்றார் என்று தெரியவில்லை.

இதை கொலை வழக்கமாக மாற்றி பதிவு செய்த போலீசார் ஜான்சாமுவேலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story