தமிழக அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 1663 பணியிடங்கள்


தமிழக அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 1663 பணியிடங்கள்
x
தினத்தந்தி 15 May 2017 1:08 PM IST (Updated: 15 May 2017 1:07 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 1663 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களை பணி நியமனம் செய்கிறது. தற்போது அரசு பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 1663 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கல்விப் பிரிவு வாரியாக உள்ள பணியிடங்கள் விவரம்: தமிழ் - 218, ஆங்கிலம் - 231, கணிதம் - 180, இயற்பியல் - 176, வேதியியல் - 168, தாவரவியல் - 87, விலங்கியல் - 102, வரலாறு - 146, புவியியல் - 18, பொருளாதாரம் - 139, வணிகவியல் - 125, அரசியல் அறிவியல் - 24, பயோ கெமிஸ்ட்ரி - 1, மைக்ரோபயாலஜி - 1, ஹோம் சயின்ஸ் - 7, தெலுங்கு - 1, உடற்கல்வி இயக்குனர் - 39.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-7-2017-ந் தேதியில் 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:


பணியிடங்கள் உள்ள பாடப்பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்புடன், பி.எட். ஆசிரியர் பயிற்சி நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.250-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை இணையதளம் வழியாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30-5-2017-ந் தேதியாகும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். இதற்கான எழுத்துத் தேர்வு 2-7-2017-ந் தேதி நடைபெறுகிறது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும், www.trb.tn.nic.in மற்றும் www.trbonlineexams.in ஆகிய இணையதள பக்கங்களைப் பார்க்கலாம்.

Next Story