அலை மின்சாரத்திற்கு புதிய சாதனம்


அலை மின்சாரத்திற்கு புதிய சாதனம்
x
தினத்தந்தி 15 May 2017 3:00 PM IST (Updated: 15 May 2017 2:59 PM IST)
t-max-icont-min-icon

இடையறாது இயங்கிக் கொண்டிருக்கும் கடல் அலைகளும் மிகப்பெரிய வரம்தான். அதை எரிசக்தியாக பயன்படுத்திக் கொள்ள நாங்கள் பல வழிகளில் முயன்று வருகிறோம்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளான காற்று மற்றும் சூரிய சக்தி வளங்களின் பயன்பாடு, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளுக்கான சிறந்த மாற்றாக விளங்குகிறது. இந்த வரிசையில் கடல் அலைகளையும் சிறந்த மாற்று எரிசக்தியாக பயன்படுத்த முடியும் என்பது விஞ்ஞானிகளின் எண்ணம். கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஏற்கனவே சில வழிமுறைகள் இருக்கின்றன. தற்போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘வேவ் ஸ்வெல் எனர்ஜி’ நிறுவனம், புதிய யுத்தியில் அலை மின்சாரம் எடுத்து சாதித்து உள்ளது. சிறிய வீடு அளவிலான கூண்டு அறைகளை கடலில் மிதக்கவிட்டு, அலைகளில் மிதந்தபடி மின்சாரம் தயாரிக்கிறார்கள் இவர்கள்.

புதிய அலை மின் உற்பத்தி குறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி டாம் டென்னிஸ் கூறுகிறார்...“ பாரீஸ் ஒப்பந்தப்படி 200 உலக நாடுகள், பூமியின் வெப்பம் 2 டிகிரி உயர்ந்திருப்பதை, இந்த நூற்றாண்டுக்குள் கட்டுப்படுத்த உறுதி பூண்டுள்ளன. அதற்கு சிறந்த வழி புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதுதான். 2016-ம் ஆண்டில் சூரிய சக்தியை மிகுந்த அளவில் பயன்படுத்தும் புரட்சி ஏற்பட்டது. அது சிறந்த யுத்திதான். இடையறாது இயங்கிக் கொண்டிருக்கும் கடல் அலைகளும் மிகப்பெரிய வரம்தான். அதை எரிசக்தியாக பயன்படுத்திக் கொள்ள நாங்கள் பல வழிகளில் முயன்று வருகிறோம்.

நாங்கள் உருவாக்கி உள்ள கூண்டு வடிவ கருவிக்குள் கடல் அலைகள் ஊடுருவும். அப்போது உள்ளிருக்கும் காற்றாலை நீரின் அழுத்தத்தை பயன்படுத்தி சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதன் இயக்கத்திற்கு 470 வாட்ஸ் சக்தி தேவைப்படும். ஆனால் ஒரு மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துவிடும். இது தற்போதைய அலை மின் உற்பத்தி கருவிகளைவிட 47 சதவீதம் சக்தி மிக்கது. இதன் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 0.7 அமெரிக்க டாலர் செலவாகும்.

இந்த நிறுவனம் ஆஸ்திரேலியாவின் மெயின்லேண்ட் கடற்கரை கிராமத்துக்கு, 100 சதவீதம் அலைமின்சாரத்தை வழங்கி வருகிறது. பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து ஏராளமான கிராமங்களுக்கு இந்த திட்டத்தை விரிவாக்க செய்ய முயற்சி நடக்கிறது.

கடல் அலைகள் கடற்கரை தாண்டியும் மக்களை மகிழ்வித்தால் சந்தோஷம்தான்!

Next Story