திருவண்ணாமலை அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி கணவன்–மகள் படுகாயம்


திருவண்ணாமலை அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி கணவன்–மகள் படுகாயம்
x
தினத்தந்தி 16 May 2017 4:00 AM IST (Updated: 15 May 2017 10:17 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 30).

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 30). இவருடைய மனைவி ஜெயா (25). இவர்களுக்கு ஜெயவர்த்தினி (3) என்ற மகள் உள்ளாள். கணவன்–மனைவி இருவரும் திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை செய்து வந்தனர். திருவண்ணாமலையை அடுத்த கொண்டம் கிராமத்தில் உறவினர் இறந்ததையொட்டி துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஞானசேகரன் தனது மனைவி ஜெயா, மகள் ஜெயவர்த்தினியுடன் சென்றார்.

பின்னர் இரவு மோட்டார்சைக்கிளில் 3 பேரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். மல்லவாடியை அடுத்த திடீர்குப்பம் அருகே அவர்களது மோட்டார்சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே ராமேசுவரத்துக்கு சென்று விட்டு போளூருக்கு திரும்பிக்கொண்டிருந்த கார் இவர்களது மோட்டார்சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் கணவன்–மனைவி உள்பட 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

அந்த பகுதியில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயா பரிதாபமாக உயிரிழந்தார். ஞானசேகரன், ஜெயவர்த்தினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story