அரக்கோணம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து: ராட்சத கிரேன் மூலம் மீட்பு பணி தீவிரம்
அரக்கோணம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதை தொடர்ந்து தடம்புரண்ட ரெயில் பெட்டிகளை தூக்கி நிறுத்த ராட்சத கிரேன் மூலம் 500–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரக்கோணம்,
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10–40 மணியளவில் 23 பெட்டிகளுடன் ஈரோடு நோக்கி ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டு இருந்தது. அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக ரெயிலில் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
ரெயில் 12 மணியளவில் வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்து கொண்டு இருந்தபோது ரெயில் என்ஜின் மற்றும் அதைத்தொடர்ந்து இருந்த 3 பொது பெட்டிகள் தடம்புரண்டன. இதனால் ரெயில் என்ஜினில் பலத்த சத்தம் ஏற்பட்டது. இதையறிந்த என்ஜின் டிரைவர் ரெயிலை சமார்த்தியமாக நிறுத்தினார்.
ரெயிலில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் ரெயிலில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் எழுந்து அலறி கூச்சலிட்டனர். பயணிகள் ரெயிலில் இருந்து கீழே இறங்கி என்ன நடந்தது என்று பார்த்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளர் மனோகரன், ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் நவீன் குலாதி மேற்பார்வையில் தலைமை பொறியாளர்கள், கட்டுப்பாட்டு அலுவலர்கள், 500–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தடம்புரண்ட ரெயில் பெட்டிகளை மீட்டு மாற்றுப்பாதையில் வைப்பதற்காக பணியில் ஈடுபட்டனர்.
ராட்சத கிரேன்
பின்னர் சென்னையில் இருந்து ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டு தண்டவாளத்தில் தடம் புரண்ட பெட்டிகளை தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. மீட்பு பணியில் 500–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். எக்ஸ்பிரஸ் ரெயிலில் தடம்புரண்ட பெட்டிகள் தவிர மற்ற 20 பெட்டிகளை ரெயிலில் இருந்து துண்டித்து மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு ரெயில் நேற்று அதிகாலை 4–30 மணியளவில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி புறப்பட்டு சென்றது.
டிரைவர் சமார்த்தியமாக ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அமைச்சர்–நீதிபதி
தடம் புரண்ட ரெயிலில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கல்யாணசுந்தரம் ஆகியோர் பயணம் செய்தனர். ரெயில் விபத்துக்குள்ளானதும் அமைச்சர், நீதிபதி ஆகியோரை அழைத்து தனித்தனி கார் மூலமாக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அரக்கோணம் வழியாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பெங்களூர் எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து மும்பை செல்லும் மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் காட்பாடி வழியாக சென்னை செல்லும் அனைத்து ரெயில்களும், சென்னையில் இருந்து காட்பாடி வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது.
இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளானார்கள். ரெயில் நிலையத்தில் திடீரென 500–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருவதை ரெயில் நிலைய பயணிகள் கூட்டம், கூட்டமாக நின்று பார்த்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story