கண்ணமங்கலம் அருகே ராணுவவீரர் மனைவி கொலை வழக்கில் 2 பேர் கைது முகமூடியை கழற்ற முயன்றதால் கொன்றதாக வாக்குமூலம்
கண்ணமங்கலம் அருகே ராணுவ வீரர் மனைவி கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலத்தை அடுத்த காட்டுக்காநல்லூர் அருகேயுள்ள ராமசந்திரபுரத்தை சேர்ந்தவர் சங்கரன் (வயது 40), ராணுவவீரர். இவருடைய மனைவி காந்தரூபி (38). இவர்களுடைய மகன் சக்திவேல் (17) பிளஸ்–2 படித்து வருகிறார். சங்கரன் தற்போது அசாமில் பணியாற்றி வருகிறார். காந்தரூபி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 12–ந் தேதி டியூசன் சென்ற சக்திவேல் இரவு 9 மணியளவில் வீடு திரும்பினார். அங்கு அறைகளில் பொருட்கள், பீரோவில் இருந்த துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. காந்தரூபியை சமையல் அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரெஜினாபேகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தனிப்படை அமைப்பு
ராணுவவீரர் மனைவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்–இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், ராஜா, ரங்கநாதன் உள்பட போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் காந்தரூபி கொலை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 10–க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து விசாரித்தனர்.
இந்த நிலையில் நேற்று தனிப்படையினர் கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில், அவர்கள் 2 பேரும் அருகேயுள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்த பலராமன் மகன் பழனி (26), கிருஷ்ணமூர்த்தி மகன் பிரசாந்த் (26) என தெரிய வந்தது.
முகமூடியை கழற்ற முயன்றதால்...
கடந்த 12–ந் தேதி இரவு 8 மணியளவில் 2 பேரும் காந்தரூபி வீட்டில் பணம், நகைகளை கொள்ளை அடிக்க திட்டமிட்டு முகமூடி அணிந்து சென்றுள்ளனர். வீட்டில் தனியாக சமையல் அறையில் சமைத்து கொண்டிருந்த காந்தரூபியிடம் கத்தியை காட்டி 2 பேரும் மிரட்டி பணம், நகையை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது காந்தரூபி 2 பேரின் முகமூடியையும் கழற்ற முயற்சி செய்துள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் காந்தரூபியை சுவற்றில் பிடித்து தள்ளிவிட்டு, பின்னர் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.
பின்னர் காந்தரூபி அணிந்திருந்த 13 பவுன் சங்கிலியை திருடி விட்டு, அவர் அணிந்திருந்த ஆடையை கிழித்து கற்பழித்து கொலை செய்ததுபோல் ஏற்பாடு செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் நாகநதி ஆற்று கரையோரம் புதைத்து வைத்திருந்த காந்தரூபியின் 13 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பழனி மோட்டார் சைக்கிள்கள் திருடுவதில் கைதேர்ந்தவர் ஆவார். அவர் மீது பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது.
அதைத்தொடர்ந்து பழனி, பிரசாந்த் ஆகியோரை போலீசார் ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

Related Tags :
Next Story