சென்னை, புதுச்சேரி, பெங்களூருவுக்கு மதுரையில் இருந்து சிறிய ரக விமான சேவை ஜூலை 28–ந் தேதி தொடக்கம்
மதுரையில் இருந்து சென்னை, புதுச்சேரி, பெங்களூருவுக்கு சிறிய ரக விமான சேவை ஜூலை 28–ந்தேதி தொடங்குகிறது.
மதுரை,
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 9–வது செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். முதுநிலை தலைவர் ரத்தினவேலு முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தனியார் சிறிய ரக விமான நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர் முருகப்பெருமாள் சிறப்புரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது:–
எங்களது நிறுவனம் சார்பில் மதுரையை சுற்றுலா மையமாக கொண்டு சிறிய ரக விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்காக மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் ஜெயந்த்சின்காவுடன் சென்னையில் இருந்து கடந்த மாதம் 8–ந் தேதி காரைக்குடி வழியாக மதுரைக்கு ஹெலிகாப்டரில் பறந்து வந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
50 இருக்கைகள்
வணிகர்கள் தங்களது நேரத்தை விரயமாக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற சிறிய ரக விமான சேவை தொடங்கப்படுகிறது. டெல்லியில் மட்டும் 350 தனியார் விமானங்கள் 25 நிறுவனங்கள் மூலம் இயக்கப்படுகின்றன. சார்ட்டர் விமான சேவை என்றழைக்கப்படும் சிறிய ரக ஜெட் விமான சேவை வருகிற ஜூலை மாதம் 28–ந் தேதி முதல் மதுரையில் இருந்து சென்னை, புதுச்சேரி, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும்.
இதற்கு கட்டணம் ரூ.5 ஆயிரத்துக்குள் மட்டுமே வசூலிக்கப்படும். இந்த விமானத்தில் 50 இருக்கைகள் இருக்கும். மதுரையில் இருந்து திருப்பதிக்கு நேரடி விமான சேவை தரிசனத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு புறப்படும் விமானம் திருப்பதியில் தரிசனத்தை முடித்து விட்டு காலை 9 மணிக்கு மீண்டும் மதுரை விமான நிலையம் வந்தடையும்.
அத்துடன் ஹெலிகாப்டர் சேவையும் தேவையின் அடிப்படையில் இயக்கப்படும். 7 பேர் பயணம் செய்யும் ஹெலிகாப்டர் குறைந்த தூரங்களுக்கு பயன்படுத்தப்படும். மதுரையில் இருந்து கொடைக்கானல், மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story