அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம்: மாவட்டத்தில் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டன
போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம்
சிவகங்கை,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களின் நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சருடன் நேற்று முன்தினம் சென்னையில் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஏற்கனவே அறிவித்தபடி 15-ந்தேதிக்கு முன்னதாகவே நேற்று முன்தினம் மாலை திடீர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். இதனால் மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் அனைத்தும் பணிமனைக்கு திருப்பி கொண்டு செல்லப்பட்டன. இதனால் பயணிகள் வெளியூர், உள்ளூர் செல்லமுடியாமல் தவிப்பிற்கு உள்ளானார்கள்.
இந்தநிலையில் நேற்று தொடர்ந்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குறைந்த அளவிலான பஸ்கள், தற்காலிக ஊழியர்களை வைத்து இயக்கப்பட்டன. சில இடங்களில் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
குறைந்த அளவில் பஸ்கள்
இதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அரசு பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டம் கிராமங்கள் நிறைந்த பகுதி என்பதால், பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். மாவட்டத்தை பொறுத்தவரையில் சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, திருப்புவனம் ஆகிய 5 பணிமனைகள் உள்ளன.
சிவகங்கை கிளை பணிமனையில் 71 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவைகளில் நேற்று காலையில் சிவகங்கை கிளை பணிமனையில் இருந்து 7 வெளியூர் செல்லும் பஸ்களும், 11 புறநகர் பஸ்களும் மட்டுமே இயக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் காலையிலேயே பணிமனை முன்பு கூடி நின்றனர். இதைதொடர்ந்து சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேசுவரன் தலைமையிலான போலீசார் பணிமனை முன்பு குவிக்கப்பட்டனர். மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, தாசில்தார் நாகநாதன் ஆகியோர் பணிமனைக்கு சென்று பஸ்கள் இயக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக பொதுமக்கள் பாதிப்படையாமல் இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.
காரைக்குடி
காரைக்குடியை பொறுத்தவரை பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. காரைக்குடி கிளையில் 43 புறநகர் பஸ்களும், 24 டவுன் பஸ்கள் உள்ளன. இவற்றில் அண்ணா தொழிற்சங்கத்தினர், தற்காலிக பணியாளர்கள் மூலம் 10 டவுன் பஸ்களும், 2 புறநகர் பஸ்களும் இயக்கப்பட்டன. இதில் ஒரு டவுன் பஸ்சை அதன் டிரைவரும், நடத்துனரும் பணிமனையில் நிறுத்திவிட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதேபோல் அரசு விரைவு போக்குவரத்துக்கழக காரைக்குடி கிளையில் 14 பஸ்கள் உள்ளன. இவற்றில் 2 பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் தனியார் பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டதோடு, கூடுதலாக ஸ்பேர் பஸ்களும் இயக்கப்பட்டன. முன்னதாக வேலை நிறுத்த போராட்டத்தை ஒட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அரசு போக்குவரத்துக்கழக கிளையில் 42 பஸ்களில், 10 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். திருப்பத்தூரை சேர்ந்த பயணி ஒருவர் கூறும்போது, திருப்பத்தூரில் இருந்து மதுரைக்கு தனியார் பஸ்களில் ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் தற்போது ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக அரசு பஸ்கள் இயக்கப்படாததால், தனியார் பஸ்களில் இருமடங்கு கட்டணத்தை அதிகரித்து ரூ.50 பயண கட்டணமாக வசூலிக்கப்பட்டது என்றார்.
திருப்புவனம்
இதேபோன்று திருப்புவனம் போக்குவரத்துக்கழக கிளையில் 44 டவுன் பஸ்கள் உள்ளன. இவற்றில் 10 டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் மதுரை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து மடப்புரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். தனியார் பஸ்கள், ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து கோவிலுக்கு சென்றனர்.
தேவகோட்டை
தேவகோட்டை பகுதியை பொறுத்தவரை போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 40 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. அவ்வாறு இயக்கப்பட்ட பஸ்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இந்த கிளையில் இயக்கப்படும் 68 பஸ்களில் நேற்று 20 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மேலும் ஊழியர்கள் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு கூடியதால், போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story