தேத்தாம்பட்டி, நெற்புகப்பட்டி பகுதிகளில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


தேத்தாம்பட்டி, நெற்புகப்பட்டி பகுதிகளில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 16 May 2017 4:15 AM IST (Updated: 15 May 2017 11:28 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே தேத்தாம்பட்டி மற்றும் கல்லல் அருகே உள்ள நெற்புகப்பட்டி பகுதிகளில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

காரைக்குடி,

காரைக்குடி அருகே தேத்தாம்பட்டி ஸ்ரீதேவி சக்தி விநாயகர் கோவில் சந்தன காப்பு திருவிழாவையொட்டி 32-வது ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. தேத்தாம்பட்டி-காரைக்குடி சாலையில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் மொத்தம் 23 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பந்தயம் பெரிய மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது. அதன்படி முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை பரளி செல்வி வண்டியும், 2-வது பரிசை ஆலத்துப்பட்டி முனீசுவரர் மற்றும் கே.ஆத்தங்குடி கண்ணத்தாள் ஆகிய வண்டிகளும், 3-வது பரிசை பி.அழகாபுரி சர்க்கரை ராவுத்தர் வண்டியும் பெற்றன.

பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் பி.அழகாபுரி லத்திபா வண்டியும், 2-வது பரிசை திருச்சி அன்பில் வண்டியும், 3-வது பரிசை அய்யம்பாளையம் முகேஷ் வண்டியும் பெற்றன. பின்னர் வெற்றிபெற்ற வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நெற்புகப்பட்டி

இதேபோல் கல்லல் ஒன்றியம் நெற்புகப்பட்டியில் உள்ள மறத்தியம்மன் கோவில் பூச்சொரிதல் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

6-வது ஆண்டாக நடத்தப்பட்ட இந்த மாட்டு வண்டி பந்தயம் நெற்புகப்பட்டி முதல் செம்பனூர் சாலையில் நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி என 2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் மொத்தம் 16 வண்டிகள் கலந்துகொண்டன.

முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் வெள்ளநாயக்கன்பட்டி ராமையாதேவர் வண்டி முதல் பரிசையும், எறும்புகுடி அஜல்ராஜா வண்டி 2-வது பரிசையும், விராமதி சந்திரன் வண்டி 3-வது பரிசையும் பெற்றன.

இதனையடுத்து நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் நெற்புகப்பட்டி நல்லப்பத்தேவர் வண்டி முதல் பரிசையும், நகரம்பட்டி கண்ணன் வண்டி 2-வது பரிசையும், கல்லல் உடையப்பா சக்தி அம்பலம் வண்டி 3-வது பரிசையும் பெற்றன.

முடிவில் வெற்றிபெற்ற வண்டிகளுக்கு விழாக்குழுவினர் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story