வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய விழுப்புரம் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
விழுப்புரம்,
விழுப்புரம் கமலா நகர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தானப்பன் மகன் கதிர் என்கிற கதிரவன் (வயது 35). இவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த மாதம் ஒரு வழக்கு தொடர்பாக கதிரவனை விழுப்புரம் நகர போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவரின் இத்தகைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.
குண்டர் சட்டம்
இதையடுத்து கதிரவனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் விழுப்புரம் நகர போலீசார் கைது செய்ததற்கான உத்தரவு நகல் கடலூர் சிறையில் இருக்கும் கதிரவனுக்கு நேற்று சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story