எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவையொட்டி கோலியனூரில் நலத்திட்ட உதவிகள்


எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவையொட்டி கோலியனூரில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 16 May 2017 4:15 AM IST (Updated: 15 May 2017 11:52 PM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவையொட்டி கோலியனூரில் நடந்த விழாவில் பொது மக்களுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழுப்புரம்,

கோலியனூர் ஒன்றிய அ.தி.மு.க. (அம்மா) சார்பில் நல்லரசன்பேட்டையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் அற்புதவேல், தொழிற்சங்க செயலாளர் வக்கீல் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு தையல் எந்திரம், சலவை பெட்டிகள், கியாஸ் அடுப்புகள், குடங்கள் மற்றும் 1000 பேருக்கு வேட்டி சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது :-

அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கியபோது அதனை அழிக்க தி.மு.க.வினர் உள்பட பலர் நினைத்தனர். ஆனால் அ.தி.மு.க. பெரும் வளர்ச்சியை அடைந்தது. எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் குழப்பமும், சிறு பிளவும் ஏற்பட்ட நிலையில் அதனை பயன்படுத்தி தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கட்சியை யும் எங்களையும் கட்டுகோப்பாக கொண்டு சென்று தனித்து நின்று கட்சியை காப்பாற்றி வெற்றி கண்டார்.

குடிநீர் பிரச்சினை

விழுப்புரம் மாவட்டத்தில் எந்த இடத்தில் குடிநீர் பிரச்சினை உள்ளது என்பதை அறிந்து உடனடியாக அதனை தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

விழாவில் வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பசுபதி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜி.ஜி. சுரேஷ்பாபு, முன்னாள் நகர செயலாளர் ஆர்.டி.முருகவேல், முன்னாள் நகர செயலாளர் காசிநாதன், ஒன்றிய துணை செயலாளர்கள் பவானிதமிழ்மணி, சீத்தா கலியபெருமாள், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அழகேசன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பார்த்தசாரதி, இலக்கிய அணி செயலாளர் பெட்மார்ட் கலியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் சாந்தாராஜ், செந்தில், உதயசூரியன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் கண்டமானடி ராஜ், நன்னாட்டாம்பாளையம் ஊராட்சி கழக செயலாளர் என்ஜீனியர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story