ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தால் பாதிப்பு இல்லை
ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்க பணியாளர்கள் போராட்டத்தால் பாதிப்பு ஏற்படவில்லை.
ஈரோடு,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தன. அதன்படி நேற்று முன்தினம் மாலையில் இருந்தே இந்த போராட்டம் தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 13 பணிமனைகளிலும் போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பஸ் ஓட்ட முன்வரவில்லை. நேற்று இரவு பணிமனைகளுக்கு கொண்டு வரப்பட்ட பஸ்கள் நேற்று காலையில் எடுக்கப்படவில்லை.
தனியார் பஸ்கள்
இதனால் நேற்று அதிகாலை நேரத்தில் பஸ்கள் இயங்குவதில் சிரமம் ஏற்பட்டது. ஈரோடு பஸ் நிலையத்துக்கு அரசு பஸ்கள் ஒரு சில மட்டுமே வந்திருந்தன. அதே நேரம் தனியார் பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்கள் அதிக அளவில் பயணிகளை ஏற்றிச்சென்றன. கோவைக்கு செல்லும் பயணிகளுக்கே தனியார் சொகுசு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன.
காலை நேரத்தில் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்க யாரும் இடையூறு செய்துவிடக்கூடாது என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கலெக்டர் பார்வையிட்டார்
ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் நேற்று காலையிலேயே வந்து பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியூர் செல்வதையும், பஸ்கள் இயங்க தடைகள் இருக்கிறதா? என்பதையும் பார்வையிட்டார். இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களுக்கும் அவர் சென்று பார்வையிட்டார்.
ஈரோடு மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் ஜோசப் டயஸ் அனைத்து பணிமனைகள் மற்றும் பஸ் நிலையங்களுக்கு சென்று பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். இதுபோல் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலமும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கண்ணாடி சேதம்
இதனால் காலை 8 மணிக்கு மேல் அனைத்து பணிமனைகளில் இருந்தும் பஸ்கள் வெளியே வரத்தொடங்கின. டவுன் பஸ்கள், வெளியூர் பஸ்கள் வழக்கம்போல ஓடத்தொடங்கின. வழக்கமான அளவைவிட குறைவாக பஸ்கள் இயக்கப்பட்டாலும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப குறிப்பிட்ட கால இடைவெளியில் பஸ்கள் செல்லும் வகையில் ஓட்டப்பட்டன. சில பஸ்களில் சீருடைகள் இல்லாமலும் டிரைவர்கள் பஸ்களை ஓட்டிச்சென்றனர். பஸ் நிலையம் மற்றும் அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் பயணிகள் காத்திருந்து பஸ்களில் ஏறிச்சென்றனர். ஆனால் போக்குவரத்து பணியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் பயண திட்டங்களை மாற்றி வைத்ததாலும் அதிக அளவில் எங்கும் கூட்டம் இல்லை.
ஈரோடு சென்னிமலை ரோட்டில் தொட்டிபாளையம் பகுதியில் நேற்று பகல் நேரத்தில் வந்த ஒரு அரசு டவுன் பஸ் மீது யாரோ சிலர் கற்களை வீசிவிட்டு ஓடினர். இதில் பஸ் கண்ணாடி லேசான சேதம் அடைந்தது. இதுபற்றி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் மற்றபடி வேறு எந்த அசம்பாவிதங்களும் இல்லாமல் பஸ்கள் இயக்கப்பட்டன. போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை.
எம்.எல்.ஏ. ஆய்வு
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தையொட்டி பஸ் போக்குவரத்து முறையாக நடைபெறுகிறதா? என்பதை ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. தென்னரசு நேற்று ஆய்வு செய்தார். ஈரோடு பஸ்நிலையத்துக்கு நேற்று காலை 9.30 மணியளவில் வந்த அவர் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் போக்குவரத்து நடைபெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அவருடன் மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் ரா.மனோகரன், அ.தி.முக. ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் வீரக்குமார் மற்றும் பலர் உடன் வந்தனர். ஈரோடு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்ணன் (கிழக்கு), ரகுபதி(மேற்கு) ஆகியோர் போக்குவரத்து பாதிப்பின்றி நடைபெற எடுத்து உள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்துக்கூறினார்கள்.
பள்ளிக்கூட டிரைவர்கள்
பெரும்பாலான பஸ்கள் ஓடினாலும் போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டக்டர்கள் பெரும்பாலானவர்கள் வேலைக்கு செல்லாமல் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி ஈரோடு மாவட்ட சி.ஐ.டி.யூ. போக்குவரத்து கழக பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜான் கென்னடி கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து கழக நிரந்தர பணியாளர்கள் அனைவரும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறோம். ஆனால் புதிதாக வேலையில் சேர்ந்த, இன்னும் பணி நிரந்தரம் ஆகாத தொழிலாளர், தற்காலிக தொழிலாளர்களை வைத்து முதலில் பஸ்களை இயக்கினார்கள். அதுமட்டுமின்றி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் அதிகாரத்தை பயன்படுத்தி பள்ளிக்கூட, கல்லூரி பஸ்கள் இயக்கும் டிரைவர்களின் மூலமும், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கனரக ஓட்டுனர் உரிமம் பெற்று உள்ள டிரைவர்களின் பட்டியலை பெற்று அவர்களை அழைத்தும் பஸ்களை இயக்கச்செய்கிறார்கள்.
குறிப்பாக பணிமனைகளில் இருந்து பஸ் நிலையங்களுக்கு பஸ்களை ஓட்டி வந்து பின்னர் எங்காவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பஸ்கள் அனைத்தும் ஓடுவதாக கணக்கு காட்டுகிறார்கள். தற்காலிக பணியாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கு பெற்றால் வேலை நீக்கம் செய்து விடுவோம் என்று அச்சுறுத்தி வேலை பார்க்க வைத்து உள்ளனர். இருப்பினும் 25 சதவீதம் பஸ்கள் மட்டுமே வழித்தடங்களில் ஓடுகின்றன. தொழிற்சங்கம் அறிவித்து உள்ள இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து நிரந்தர பணியாளர்களும் கலந்து கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
85 சதவீதம் பஸ்கள்
ஈரோடு மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் ஜோசப் டயஸ் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை வேலை நிறுத்தம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. எங்கள் போக்குவரத்துக்கழக பணியாளர்கள் ஒரு சிலரைத்தவிர நிரந்தர ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள் என அனைவரும் பணிக்கு வந்து உள்ளனர். அனைத்து பணிமனைகளில் இருந்தும் பஸ்கள் 85 சதவீதம் அளவுக்கு ஓட்டப்படுகிறது. தனியார் பஸ்களும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளின் ஆலோசனையின் படி முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது. பெருந்துறை பணிமனையில் மட்டும் அதிகபட்ச பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. மற்றபடி அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி பஸ் நிலையங்கள், பணிமனைகள் மற்றும் முக்கிய பஸ் நிறுத்தங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story