மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 6 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சம்பத் வழங்கினார்


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 6 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சம்பத் வழங்கினார்
x
தினத்தந்தி 16 May 2017 4:30 AM IST (Updated: 16 May 2017 12:19 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 6 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சம்பத் வழங்கினார்.

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கலெக்டரிடம் தங்களுடைய கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

கூட்டத்தில் மொத்தம் 485 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் சம்பத் உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு கலெக்டர் நேரிடையாக சென்று அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.

நலத்திட்ட உதவிகள்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 4 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை மற்றும் 2 பெண்களுக்கு ஆதரவற்ற விதவை ஓய்வூதியம் ஆகியவற்றை கலெக்டர் சம்பத் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story