காணொலி காட்சி மூலம் அரசு முதன்மை செயலாளர் மனைப்பிரிவுகளை வரன்முறைபடுத்துதல் குறித்து கலெக்டருடன் ஆய்வு
காணொலி காட்சி மூலம் அரசு முதன்மை செயலாளர், மனைப்பிரிவுகளை வரன்முறைபடுத்துதல் குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத்துடன் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் அரசு அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைபடுத்துதல் குறித்து சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் நேற்று காணொலி காட்சி மூலம் சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத்துடன் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் மேட்டூர் சப்–கலெக்டர் மேகநாதரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ், நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குநர் லட்சுமி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் தெய்வசிகாமணி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வு கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் அரசு முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பேசியதாவது:–
6 மாத காலம்
அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் வீட்டுமனைகள் மற்றும் மனைப்பிரிவுகள் 6 மாத காலத்திற்குள் வரன்முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள், குளம், ஏரி போன்ற நீர் பிடிப்பு இடங்கள், விமான நிலைய தடைப்பகுதி, நத்தம் ஆகியவற்றில் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் இருந்தால் அவை வரன்முறைப்படுத்தப்படாது.
மனை உரிமையாளர்கள் அவர்களது சங்கம் அல்லது மனை பிரிவு அபிவிருத்தியாளர் ஆகியோரால் மனை வரன்முறைப்படுத்த தகுதியான அதிகாரிகளான மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு ஆணையாளர்களும், பேரூராட்சிக்கு செயல் அலுவலர்களும், கிராம ஊராட்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டணங்கள் எவ்வளவு?
பரிசீலனை கட்டணமாக மனை ஒன்றிக்கு ரூ.500 மட்டும் செலுத்தப்பட வேண்டும். முறைப்படுத்துதல் கட்டணம் மற்றும் வளர்ச்சி கட்டணமாக 1 சதுர மீட்டருக்கு மாநகராட்சி பகுதிக்கு ரூ.100 மற்றும் ரூ.600–ம், நகராட்சி பகுதிகளில் தேர்வு நிலை நகராட்சிக்கு பகுதிக்கு ரூ.60 மற்றும் ரூ.350ம், இதர நகராட்சி பகுதிக்கு ரூ.60 மற்றும் ரூ.250ம், பேரூராட்சி பகுதிகளில் ரூ.30 மற்றும் ரூ.150ம், கிராம ஊராட்சிகளில் ரூ.30 மற்றும் ரூ.100–ம் மனை ஒன்றிக்கு செலுத்தப்பட வேண்டும்.
உரிய ஆவணங்களுடன் மற்றும் மனைகள் விற்கப்பட்ட, விற்கப்படாத விவரங்கள் அதனை உரிமையாளர் பெயருடன் பட்டியலிட்டு ஆவணங்களை நகர் ஊரமைப்புத்துறையின் தொடர்புடைய அலுவலகங்களில் சமர்பிக்கப்பட வேண்டும்.
மனையில் கட்டிடங்கள் இருப்பினும் மனை வரைமுறைப்படுத்தப்பட வேண்டும். கட்டிங்களுக்கு எதிர்காலத்தில் அரசு வெளியிடும் விதிமுறைகளுக்கு ஏற்ப கட்டிட வரன்முறைப்படுத்திக் கொள்ளப்பட வேண்டும். நகர்ஊரமைப்புத்துறையால் ஒப்புதல் அளிக்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளுக்கும் இவை பொருந்தும் என்பதால் ஒவ்வொரு மனை உரிமையாளர்களும் தனி கவனம் செலுத்தி மனை வரன்முறைப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story